கல்யாணம் வரை சென்று, ரத்தான பிரபல நடிகரின் திருமணம்…பல உலகில் பரபரப்பு

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரும்,தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான நடிகர் விஷால், ஆந்திராவை சேர்ந்த அனிஷா ரெட்டியை திருமணம் செய்வதாக இருந்தார். இருவரும் காதலித்து வந்தனர், பின்னர் நிச்சயதார்த்தமும் முடிவடைந்த நிலையில், திடீரென்று ரத்தாகியுள்ளது.

அனிஷா ரெட்டி ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மகள். அமெரிக்காவில் கல்லூரி மடிப்பை முடித்த இவர், சினிமாவில் நடிக்க ஆர்வம் இருந்ததால், தெலுங்கு சினிமாவில் கால்பதித்தார். இவர் பெல்லி சூப்ளு மற்றும் அர்ஜுன் ரெட்டி படங்களில் விஜய் தேவர்க்கொண்டவுடன் நடித்தார். இவருக்கும், விஷாலுக்கும் காதல் மலர்ந்து, பிறகு நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் ஐதராபாத்தில் நடந்து முடிந்தது. இந்த நிச்சயதார்த்தத்தில் சில நடிகர்கள் கலந்து கொண்டனர்.

READ  #Alert யாரும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்யக்கூடாது காஷ்மீரில் 4 முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தது உள்துறை அமைச்சகம்.

ஆக்டொபர் மாதம் கல்யாணம் நடத்த முடிவு செய்திருந்தனர். எனது கல்யாணம் நடிகர் சங்க கட்டிடத்தில் நடக்கும் என்று விஷால் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விஷால்- அனிஷா திருமணம் நிறுத்தப்பட்டதாக தெலுங்கு சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. இது பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நிச்சயதார்த்தம் போது எடுத்த படங்களை அனிஷா பேஸ்புக்,இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியுள்ளார். அதற்கான காரணத்தயும் அவர் தெரிவிக்காததால், திருமணம் நின்று விட்டது என்று திரையுலக வட்டாரங்கள் பேச தொடங்கிவிட்டனர்.

சரி இது குறித்து நடிகர் விஷாலிடம் விசாரிக்கலாம் என்று அவருக்கு தொடர்பு கொண்ட போது அவரது அனைத்து எண்களும் சுவிட்சாப் செய்யப்பட்டுள்ளது. இருவரின் குடும்பத்தினரும் இது பற்றி எந்தத் தகவல்களையும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து அவர்களின் நண்பர்கள் கூறியதாவது, திருமணம் நின்றுபோனதாக வெளிவந்த தகவல்கள் உண்மையானதாக இருக்காது என்று நாங்கள் நம்புகிரோம். 2 நாட்கள் முன்னாடி கூட இருவரும் சந்தித்து பேசிக்கொண்டதாக தெரிவித்தனர்.

Loading...
READ  நான் தமிழன் இல்லையா வீரமணிக்கு பொளேர் பதிலடி கொடுத்த பாண்டே ! சிறப்பான சம்பவம். ட்ரைலர் இருப்பதாகவும் எச்சரிக்கை

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here