அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு வேலை பிரம்மாஸ்திரத்தை எடுத்த மோடி அரசு ! இனி திமுக எப்படி அரசியல் செய்யும்?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

டெல்லி.,

நாட்டின் எல்லையை சீரமைக்கும் பணியை தொடங்கி அதில் தற்போது வெற்றி பெற்றுள்ள மோடி அரசு, சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு போன்று பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து சாதியை சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு கொண்டுவந்து அதனை நடைமுறை படுத்தியது இந்த சட்டத்திற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என பல தேசிய கட்சிகள் ஆதரவு அளித்தன.

தற்போது மத்திய அரசு மேலும் இரண்டு திட்டங்களை நாட்டின் நலன் கருதி அமல்படுத்த இருக்கிறது என்று முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்துள்ளன அவற்றில் ஒன்று மதம்மாற்ற தடுப்பு சட்டம் ஆனால் மற்றொன்று குறித்து மத்திய அரசு சார்பில் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில் அது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

READ  நேற்று பாசம் இன்று பாடம் - அமெரிக்காவில் மோடி

அனைவரும் தாய் மொழியை கற்கும் விதமாகவும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மட்டுமே அரசு பள்ளியில் பயிலும் நிலையை மாற்றி அனைத்து தரப்பினரும் அரசு பள்ளியில் பயிலும் வாய்ப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது, இதன் மூலம் அரசு பள்ளிகளின் தரம் உயர்வதோடு நீண்ட நாட்கள் கோரிக்கையை நிறைவேற்ற இருக்கிறது.

Loading...

அதில் ஒன்று அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இனி அரசாங்க வேலையில் முன்னுரிமை கொடுக்கும் விதமாக கொள்கை முடிவை அமல்படுத்த இருக்கிறது, இதன் மூலம் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் எளிதில் அரசாங்க வேலையை பெற முடியும் என்பதோடு பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடையலாம் என்ற கண்ணோட்டத்தில் மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையினை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நீட் தேர்வு ஏழை மாணவர்கள் பலன் பெரும் நோக்கில் கொண்டுவரப்பட்ட போதும் நீட் தேர்வின் மூலம் மருத்துவ கல்லூரி உரிமையாளர்களுக்கு வருமானம் போனதால் அதை தமிழகத்தில் மட்டும் குறிப்பிட்டு எதிர்க்கும் சூழல் உருவானது., அது போல் இதற்கும் தனியார் பள்ளி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தலாம் என்ற நிலையில் அதனை எவ்வாறு சமாளித்து மக்களிடம் இந்த திட்டத்தை கொண்டு செல்வது என்ற முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளதாம்.

READ  தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு 4 லட்சம் நிதியுதவி வழங்கினார் அமைச்சர்.

அரசு பள்ளியில் படிப்பவர்களுக்கு அரசு வேலையில் இட ஒதுக்கீடு வழங்குமா அல்லது முன்னுரிமை வழங்கப்படுமா என்று மத்திய அரசு விரிவாக விளக்கினாலே தெரியவரும் ! எது எப்படியோ மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை மத்திய அரசு திறம்பட நிறைவேற்றி வருவதாகவும் இனி அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் வாழக்கை தரம் உயர மத்திய அரசு சரியான திட்டமிடலை மேற்கொண்டு வருவதற்கு அரசு பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் மொழியை வைத்து அரசியல் செய்வது முற்றிலும் அழிந்துவிடும் என்றும் இது திமுக போன்ற கட்சிகளுக்கு மத்திய அரசு கொடுத்த சரியான பதிலடி என்றும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here