காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்த மத்திய அரசு பின்பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்த குருமூர்த்தி.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கவதற்கு முன்னோட்டமாகவே  பாஜக, மெகபூவா கட்சியுடன் கூட்டணி அமைத்ததாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி சில தகவல்களைகூறியுள்ளார், மேலும் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீங்கம் மூலம் இந்தியாவிற்கு 1 லட்சம் கோடி மக்கள் வரிப்பணம் மிச்சமாவதாகவும் குருமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பொருளாதாரம் மற்றும் கலாச்சார மையம்  சார்பில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு பிரிவு  370 நீக்கம் குறித்த பொதுவிளக்க  நிகழ்ச்சி, கோவையில் நேற்று   (21/09/19) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட துக்ளக் ஆசிரியர்  எஸ்.குருமூர்த்தி  பேசியதாவது: ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை நேருவிற்கு பதில்  வல்லபபாய் படேலிடம் ஒப்படைத்திருந்தால் அவர் அதை அப்போதே வேறு மாதிரியாக கையாண்டு காத்திருப்பார்.


சர்தார் படேல் போன்றே பண்டிட் நேருவும் தேசபக்தர்தான், நல்ல மனிதர்தான். ஆனால், நாட்டை ஆளும் தலைவர் நல்லவராக இருந்தாலும் வல்லவராக இல்லாவிட்டால்  நாட்டுக்குப் பிரச்னைகள்தான் வரும் என்பதற்கு ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையே  சிறந்த  உதாரணம்.

Loading...
READ  ஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்


மேலும் படேலின் புத்திசாலித்தனத்தாலேயே  “தற்காலிகமானது’ என்ற வார்த்தை பிரிவு 370 – ல்  சேர்க்கப்பட்டது என்றும் அவர் கூறினார் . அவர் சேர்த்த அந்த தற்காலிகமான  வார்த்தைதான் இப்போது நமக்கு மிக பெரிய சீர்திருத்தம் செய்ய உதவியுள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் விவகாரத்தில்   மோடி அரசு மிகவும்  புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டுள்ளது. இப்படி ஒரு காரியத்தை சரியாக  செய்ய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுதான், யாரும் எதிர்பார்க்காத வகையில் முக்கிய எதிர்க்கட்சியான   மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் 2015-ல்  பாஜக கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது . அவர்களுடன் கூட்டணியில் இருந்த காலகட்டத்தில்  இதனக்குத் தேவையான விஷயங்களைத் தெரிந்து கொண்டது மோடி அரசு .

எதற்காக பாஜக தன்னுடன் கூட்டணி அமைத்தது என்பதை மெகபூவா  முப்தி தெரிந்து அறிந்து  கொள்ளும் முன்னதாக, அந்தக் கூட்டணியில் இருந்து விலகியதோடு மட்டுமல்லாமல் கனகச்சிதமாக  குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது தற்போது ஆளுநர் மூலம் மாநில அரசின் சார்பில் சிறப்பு அந்தஸ்தை நீக்க பரிந்துரை செய்ததை நீங்கள் அறியலாம் .

READ  பா.சிதம்பரத்தை கைது செய்ய சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறைக்குள் கடும் போட்டி...செய்வாய் கிழமை முதல் அமலாக்கத்துறை கஸ்டடியில் பா.சிதம்பரம்

மேலும் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழக்கம் செய்யப்பட்டதன் இதன் காரணமாக 2016-இல் காஷ்மீரில் ராணுவத்தின் மீது  3,415 ஆக இருந்த கல்லெறி சம்பவங்கள், 2017-இல் வெறும் 51 ஆக குறைந்தன. பயங்கரவாத செயல்களின் எண்ணிக்கையும் பின்னணியும் வெகுவாக குறைந்துள்ளது . சிறப்பு அந்தஸ்தை நீக்கினால் ஏதாவது பிரச்னை வருமா என்பதை அறிந்து கொள்வதற்காகவே, அதற்கும் முன்னதாக முத்தலாக் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு நாட்டு மக்களின் எதிர்க்கட்சிகளின் எண்ணவோட்டத்தினை பாஜக கணக்கிட்டது.

இதன் பிறகே மத்திய அரசு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கும் சட்டத்தை நிறைவேற்றியது. தற்போது சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு திரும்ப பெற்றதன் மூலம் அடுத்த மூன்று முதல்  5 ஆண்டுகளில் இந்தியாவிற்கு மக்கள் வரிப்பணம்  1 லட்சம் கோடி அளவிற்கு மிச்சமாகும் என்று குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

READ  ஓ இதற்குத்தான் நீட் தேர்வை எதிர்த்தீர்களா உதித்சூர்யா மூலம் சிக்கிய..இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here