பாஜகவில் இணைய போகிறாரரா MP வசந்தகுமார் , அதிர்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சமீபத்தில் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அப்துல்லா குட்டி பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் புகழ்ந்து பேசியதற்காக காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதே போல தான் கன்னியாகுமரி தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை தோற்கடித்து வெற்றி பெற்றவர் காங்கிரஸ் கட்சியின் வசந்த குமார்.

அவர் நேற்று மத்திய அரசையும் , பிரதமர் மோடியையும் புகழ்ந்து பேசியுள்ளார் காரணம் நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் இருந்து 20 மீனவர்கள் கேரளா சென்று அங்கிருந்து மீன் பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர்.

ஆனால் எதிர்பாராதவிதமாக கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது அவர்கள் சென்ற படகும் பழுதாகி விட்டதால் அவர்கள் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர்.

Loading...
READ  இனி தமிழக பாஜக சார்பில் இவர்கள் மட்டும் தான் விவாத நிகழ்சிகளில் கலந்து கொள்ள முடியும்....

அவர்களை மீட்பதற்காக கன்னியாகுமரியின் பாராளுமன்ற உறுப்பினரான வசந்தகுமார் இரவு 10 :38 மணிக்கு பிரதமர் அலுவலகத்திற்கு மெயில் அனுப்பியுள்ளார்.

அதை பார்த்த பிரதமர் மோடி சற்றும் தாமதிக்காமல் ராஜ்நாத் சிங்கிடம் தகவலை கூற அவர் இந்திய கடற்படை தளபதிக்கு தகவலை கூறியுள்ளார்.

உடனே கிளம்பிய இந்திய கடட்படை அந்த மீனவர்களை பத்திரமாக மீட்டுள்ளது , இதனால் மனம் நெகிழ்ந்த வசந்தகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில் நான் ஒரு காங்கிரஸ் கட்சி காரன் மேலும் பாஜகவின் முன்னாள் அமைச்சரை தோற்கடித்தவன் ஆனால் எந்த வெறுப்பும் இன்றி மக்கள் நலன் தான் முக்கியம் என்று நான் தகவலை தெரிவித்த 10 நிமிடத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது பாஜக அரசு.

என்ன தான் தமிழகம் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்றாலும் தமிழக மக்களை மாற்றான் தாய் மகனாக கருதாமல் ஓடி வந்து உதவி செய்தது மோடியின் நற்பண்பை காட்டுகிறது.

READ  பாஜக ஆளும் இரண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு !

என்று தொடர்ந்து பாஜக அரசை புகழ்ந்து தள்ளியுள்ளார் வசந்தகுமார் , அதனால் கேரளாவில் நடந்ததுபோல் அவரையும் கட்சியை விட்டு தூக்க காங்கிரஸ் தலைவர்கள் சிலர் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

மேலும் குறிப்பாக வசந்தகுமாரின் இந்த பேச்சு ஸ்டாலினை எரிச்சலூட்டியுள்ளது அதனால் அவரும் காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை காங்கிரஸ் கட்சியில் இருந்து வசந்தகுமார் நீக்கப்பட்டால் மறுகணமே பாஜகவில் இணைய திட்டமிட்டுள்ளார் வசந்தகுமார் என்றும் இதனால் வசந்தகுமாருக்கு இழப்பு இல்லை காங்கிரஸ் கட்சிக்குத்தான் இழப்பு என்றும் தெரிவித்துள்ளனர்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here