தோனியை ஓரங்கட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்…ரசிகர்கள் கொந்தளிப்பு

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த கிரிக்கெட் வீரர், முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக இருந்தவர் தோணி. இவர் கேப்டனாக இருந்தபோது நிறைய கோப்பைகளை இந்தியாவிற்காக பெற்றுத்தந்தார். எப்போது விராட் கோலியிடம் கேப்டன் பொறுப்பு வந்ததோ அன்றிலிருந்து தோணி இந்திய அணியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக புறக்கணிக்கப்பட்டார்.

இந்நிலையில் அடுத்தமாதம் 3 T 20 போட்டிகளை கொண்ட தொடரை விளையாட தென்னாபிரிக்க அணி இந்திய வர இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் தோணி இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த தொடருக்கான வீரர்கள் பட்டியலை அடுத்த மாதம் 4 ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட இருக்கிறது. அதில் தோனியை ஒதுக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அனியுடன் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதனால் இந்த அணியை அப்படியே தென்னாப்ரிக்காவுடன் விளையாட தேர்வு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

READ  தவறு செய்வது முதலமைச்சராக இருந்தாலும், தண்டிக்கப்படுவார்...மத்திய அரசு எச்சரிக்கை

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது. அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள 20 ஓவர் உலக கோப்பைக்கு இந்திய அணி தயாராகி கொண்டு வருகிறது. அதற்குள் 22 T 20 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. அதனால் இளம் வீரர்களுக்கு நங்கள் முக்கியத்துவம் கொடுக்க இருக்கிறோம். அதனால் இனி வரும் காலங்களில் இந்தியின் விக்கெட் கீப்பராக ரிஷப்பண்ட் வரவே அதிக வாய்ப்புள்ளது. என்று அவர் கூறினார். அதனால் தோணி தனது ஓய்வை அறிவித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here