நான்காம் நாள் ஆட்டமான இன்று இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா மோதுகிறது.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

இன்று இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இரண்டு அணிகளுக்கும் இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டி, விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி மயங்க் அகர்வால், ரோஹித் ஷர்மா ஆகியோரின் அபார ஆட்டத்தால் 502 ரன்களுக்கு முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை துவங்கிய தென்னா பிரிக்க அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 39 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து திணறியது.

READ  சென்னையில் வருகிறது புதிய வகை வைரஸ் மக்களே உஷார்

மூன்றாம் நாள் ஆட்டத்தில், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கரும், கேப்டன் டுப்பிளஸிசும் பொறுமையாக விளையாடினர். அந்த அணி வீரர்கள் டுப்பிளஸிஸ், டீன் எல்கர் மற்றும் டி காக் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்தநிலையில், எட்டு விக்கெட் இழப்பிற்கு தென்னாப்பிரிக்கா அணி 385 ரன்களை எடுத்தது. இதனிடையே தென்னாப்ரிக்கா 117 ரன்கள் பின் தங்கியநிலையில், நாளாம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. அதில், 431 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன்மூலம் இந்திய அணி 71 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்திய வீரர் அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். தொடர்ந்து 4ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

Loading...
READ  குறைந்த செலவில் தரமான கல்வி கற்க சிறந்த நாடு இந்தியா !

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here