இந்தியாவின் நிரந்தர நண்பன் ரஷியா ஐ நா சபையில் இந்தியா குறித்து ரஷியா சொல்லிய ஒற்றை வார்த்தை சீனா பாகிஸ்தானிற்கு மரண அடியாக விழுந்துள்ளது.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

ஐ நா.

இந்தியாவின் காஷ்மீர் பகுதி இரண்டாக பிரிக்கப்பட்டு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370 திரும்ப பெறப்பட்டது. இதனை இந்தியாவின் உள்விவகாரம் என்று உலக நாடுகள் அனைத்தும் கூறிவிட்டன, ஐ நா சபையும் அதனையே தெரிவித்தது.

முதலில் இந்தியாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்த சீனா பிறகு ஐ நாடுகள் சபை மூலம் காஷ்மீர் விவகாரத்தில் பன்னாட்டு விசாரணை தேவை என்று பாகிஸ்தானின் கோரிக்கையை வலியுறுத்தியது. இதனால் நேற்று இரவு 10.10 மணிக்கு ஐ நா சபையில் காஷ்மீர் விவகாரம் குறித்து சிறப்பு விவாதம் நடைபெற்றது.

Loading...
READ  அதிரடி சந்தானத்தின் வருகை பாமகவினருக்கு மகிழ்ச்சியையும் திமுகவினருக்கு வருத்தத்தையும் தரும். நிறைவேறிவிட்டது.

இதில் ஐ நா விற்கான இந்திய தூதர் செய்யது அக்பருதீன் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிவிட்டார். காஷ்மீர் முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் இதில் மற்றொரு நாடு தலையிடுவதையோ இந்தியா – பாகிஸ்தான் பிரச்னையில் வேறு நாட்டின் தலையீட்டை விரும்பவில்லை என்று தெரிவித்தார். அத்துடன் ஜனநாயகம் குறித்து இந்தியாவிற்கு பாகிஸ்தான் பாடம் எடுக்கவேண்டாம் என்றும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக ரஷியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் இந்தியா -பாகிஸ்தான் எல்லை பிரச்னையை இரு நாடுகளுமே பேசி தீர்த்துக்கொள்வதே சரி என்றும் பன்னாட்டு விசாரணை தேவையில்லை என்றும் கூறி விட்டன.

வழக்கம்போல் சீனா மட்டும் பாகிஸ்தானிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது, இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் ரஷியா இந்தியாவிற்கு ஆதரவாக இந்த தீர்மானத்தையே தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நீக்க முன்வந்தது, இறுதி வரை இந்தியாவுடன் இருப்போம் என்றும் சொல்லி ஒட்டுமொத்த இந்தியர்கள் மனதிலும் ரஷியா இந்தியாவின் நிரந்த நண்பன் என்பதனை உறுதி செய்து விட்டது.

READ  புத்தர் சிலையை திறந்து வைத்த போது பிரதமர் நரேந்திர மோடி

இறுதிவரை இந்தியாவுடன் இருப்போம் என்று ரஷியா சொல்லியதை தொடர்ந்து இந்தியர்கள் #THANKSRUSSIA என்ற ஹாஸ்டேக் மூலம் நன்றியை தெரிவிக்க அது உலக ட்ரெண்டிங்கிலும் இடம்பிடித்தது.

இவை அனைத்தும் இந்தியாவின் சிறப்பான வெளியுறவு கொள்கை மூலமே சாத்தியமானதாகவும் அரசிற்கு நன்றியை தெரிவித்து வருகின்றனர். இவை அனைத்திற்கும் மேலாக உலக நாடுகள் ஐ நா சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகள் இந்தியாவின் பக்கம் நிற்பது பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு மரண அடியாக விழுந்துள்ளது.

©TNNEWS24


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here