தீவிரவாதிகளால் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஆபத்து….மேற்கிந்திய தீவில் உச்சகட்ட பாதுகாப்பு

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான பயிற்சி ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்று பிசிசிஐ க்கு கிடைத்த ஒரு தகவலில் , இந்திய கிரிக்கெட் வீரர்களின் செயல்பாடுகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம்,அதனால் அவர்களை காப்பாற்றி கொள்ளுங்கள் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது.

இந்த செய்தி குறித்து விசாரணை மேற்கொண்ட போது, அது வதந்தி என்று நங்கள் உறுதி செய்துவிட்டோம் என பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது. இருந்தாலும் வீரர்களின் பாதுகாப்பில் நாங்கள் எப்போது கவனமாக இருப்போம் என்று பிசிசிஐ கூறியுள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ, ஆண்டிகுவாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு இந்த தகவலை தெரிவித்துள்ளது. இந்த விஷயம் அந்நாட்டு அரசிற்கும் கொண்டுசெல்லப்பட்டது.

READ  காஷ்மீர் விவகாரத்தில், இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட பாகிஸ்தானியர்கள்...இங்கிலாந்து போலீசார் தடியடி.

இந்நிலையில், இந்திய அணியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் இன்னும் பாதுகாப்பை அதிகரிப்போம் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த செய்தியினால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் இந்த டெஸ்டு தொடர் தொடருமா இல்லை இந்திய அணியினர் தாயகம் திரும்புவார்களா என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here