உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி…

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

ஜப்பானில் நடைபெற்றுவந்த சர்வதேச ஆக்கி போட்டியில் இந்திய ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் ஒலிம்பிக் டெஸ்ட் பந்தயம் என்ற பெயரில் சர்வதேச அளவிலான ஆக்கி போட்டி நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்திய ஆண்கள் அணி நியூஸிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தியது. தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 5 – 0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை பந்தாடி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

லீக் ஆட்டத்தில் இந்திய அணி நியூஸிலாந்திடம் 1 – 2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்திருந்தது. தற்போது அதற்கும் சேர்த்து பழி வாங்கிவிட்டது. இந்திய அணி தரப்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ஆட்டத்தின் 7 வது நிமிடத்திலும் , சாம்ஸர்சிங் ஆட்டத்தின் 18 வது நிமிடத்திலும் , குருசாகிப்சிங் 22 வது நிமிடத்திலும், நீலகண்ட சர்மா 26 வது நிமிடத்திலும், மந்தீப்சிங் 27வது நிமிடத்திலும் கோல்கள் அடித்து அணியை வெற்றியடைய செய்தனர்.

READ  மதம் மாற மிரட்டல் உயிரை விட்ட மகள் ! கம்யூனிஸ்ட்களுக்கு ஓட்டு போட்டு நாசமா போனேன் உங்கள் பெண் பிள்ளைகள் பத்திரம் கதறி அழும் தந்தை.

அதேபோல் இந்திய பெண்கள் அணியும் அசத்தினார்கள். இந்திய பெண்கள் அணி பிரிவின் இறுதி ஆட்டத்தில், உலக அளவில் 14 வது இடத்தில இருக்கும் ஜப்பானுடன் பலப்பரீட்சை நடத்தியது. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், இந்திய அணி தொடக்கத்தில் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் பலனாக 11வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை நவஜோத் கவுர் கோல் அடித்து அசத்தினார். ஆனால் அடுத்த நிமிடத்திலேயேயே ஜப்பான் பதில் கோல் அடித்து ஆட்டத்தை விறுவிறுப்பாக கொண்டுசென்றது. இரு அணிகளும் 1 – 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருக்கும் பொது. இந்திய அணி மீண்டும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது

ஆட்டத்தின் 33 வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்ட்டி அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி குர்ஜித் கவுர் கோல் அடிக்க முயற்சி செய்தார், ஆனால் அதை ஜப்பான் கோல்கீப்பர் அருமையாக தடுத்து நிறுத்தினார். அப்படி தடுத்து நிறுத்தப்பட்ட பந்தை இந்தியாவின் இளம் வீராங்கனை லாலரெமசியாமி அருமையாக கோலாக்கினார். ஆட்டத்தின் கடைசியில் ஜப்பானுக்கும் ஒரு பெனால்ட்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்திய அணியின் கோல்கீப்பர் சவிதா துரிதமாக செயல்பட்டு அதனை தடுத்து நிறுத்தினார். ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 2 – 1 என்ற கோல் கணக்கில் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

Loading...
READ  தோனியை பார்த்து கதறும் பாகிஸ்தான் ! தோனி செய்தது சரியா ? தவறா ?

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here