தாய்லாந்தில் அடித்து கொல்லப்பட்ட இந்தியர்….

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

அமிதப்பால் சிங் என்பவர் இங்கிலாத்து நாட்டில் வசித்து வந்தார்.அவருக்கு வயது 34. இவருடையது மனைவியின் பெயர் கவுர், அவருக்கு வயது 33. விடுமுறைக்காக இருவரும் தாய்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளனர். தாய்லாந்தின் புக்கெட் நகரில் 5 ஸ்டார் ஓட்டலில் தங்கி உள்ளனர். அதே ஓட்டலில் நார்வேயை சேர்ந்த 53 வயதுடைய ரோஜர் புல்மேன் என்பவரும் தங்கியுள்ளார்.

இந்நிலையில் அமிதப்பால் தம்பதியினருக்கும், ரோஜர் புல்மேனுக்கும் ஏதோ தகராறு ஏற்பட்டு, அது முற்றிப்போக, புல்மேன் அமித்பாலை அடித்தே கொன்றுவிட்டார். இந்த சம்பவம் நடக்கும் போது ரோஜர் புல்மேன் குடி போதையில் இருந்துள்ளார். இந்த சம்பவம் பற்றி அமித்தின் மனைவி கூறியதாவது, புல்மேன் பக்கத்துக்கு அறையில் தங்கியிருந்தார். திடீரென்று நிர்வாணமாக எங்கள் அறைக்குள் நுழைய முயன்றார். அதை கேட்ட என்னையும், என மகனையும் தாக்க வந்தார்.

READ  மசாஜ் செண்டர் என்ற பெயரில் விபச்சாரம்...6 அழகிகள் கைது

அப்போது அந்த நபரை எனது கணவர் தடுத்து நிறுத்த முயற்சி செய்தார். அப்போது எனது கணவர் என்னை எனது மகனை தூக்கிக்கொண்டு வெளியில் செல்லுமாறு சொன்னார். நானும் எனது மகனை தூக்கிக்கொண்டு வெளியே சென்று நிர்வாகத்திடம் புகார் அளித்தேன், ஓட்டல் நிர்வாகிகள் அங்கு சென்று பார்த்தபோது , புல்மேன் எனது கணவரை அடித்தே கொன்றுவிட்டார். என்னையும் எனது மகனையும் காப்பாத்த எனது கணவர் உயிர் தியாகம் செய்திருக்கிறார் என்று வருத்தத்துடம் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here