முப்படைகளுக்கும் ஒரே தலைவர் ஏன்..மோடியின் ராஜதந்திரம் இதுதானா..

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

இந்திய நாட்டின் 73 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

73 வது சுதந்திர தின உரையில், பிரதமர் மோடி பேசியதாவது, தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க நாம் கடுமையாக செயல்பட்டு வருகிறோம். நாட்டின் பாதுகாப்பு ஒரு முக்கியமான பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. தீவிரவாதத்திற்கு ஆதரவளித்த நாடுகளை நாம் அடையாளம் கண்டு அம்பலப்படுத்தியுள்ளோம் . அதனால் உலகில் பல்வேறு நாடுகள் இந்தியாவின் பக்கம் ஆதரவாக உள்ளது. தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் கடுமையாக தண்டிக்கபடுவார்கள் என்று பிரதமர் மோடி பேசினார்.

மேலும் அவர் கூறியதாவது, முப்படைகளுக்கும் இனி ஒரே தலைவர் இருப்பார் என்று மோடி தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு 1999 கார்க்கில் போர் முடிவுக்கு பின்னர், முப்படைகளுக்கும் தனி தனி தளபதிகளை இந்திய அரசாங்கம் தேர்ந்தெடுத்தது. ஆனால் இனி அதுபோல இருக்காது. முப்படைகளும் ஒருவர் கட்டுப்பாட்டில் நியமிக்கப்படுவது, நாட்டின் பாதுகாப்பை பலபடுத்த எடுத்த முடிவு என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

READ  சிக்கிமிலும் ஆட்சியை பிடிக்கிறது பாஜக...10 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவளை அந்த பதவியில் நியமிக்க மோடி விரும்புவதாகவும், இதன்மூலம் இந்தியாவில் தீவிரவாதத்தை முழுவதும் ஒடுக்குவதுடன் சீனா, மற்றும் பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்தியாவிற்கு சொந்தமான காஷ்மீர் பகுதிகளை மீட்க அரசு ராஜ்ய ரீதியாக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here