இந்திய வரலாற்றை மாற்றி அமைத்த மோடி ! வல்லரசு நாடுகளுக்கு இணையாக ஆயுத ஏற்றுமதியை தொடங்கியது இந்தியா !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

இந்தியா ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை வாங்கிய காலம் கடந்து தற்போது இந்திய தயாரிப்புகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவிற்கு வணிக ரீதியாக பணம் கிடைப்பது மட்டும்மல்லாமல் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பும் உயர்ந்துள்ளது.

நம் இந்தியாவை சுற்றி உள்ள நாடுகளுக்கு ஆயுதம் விற்பனை செய்வதிலும், அந்த நாடுகளுடனான ராணுவ உறவை வலுப்படுத்துவதிலும் சீனா கடந்த சில ஆண்டுகளாகவே மிக தீவிரம் காட்டி வருகிறது.

கடந்த 2017-ஆம் ஆண்டு வங்க தேசத்திற்கு 17 அடி நீளமும், 2.11 மில்லியன் கிலோ எடையும், மணிக்கு 33 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றலும் ,980 அடி ஆழம் வரை செல்லும் திறனும் கொண்ட மிங் வகையைச் சேர்ந்த இரு நீர்மூழ்கி கப்பல்களை சீனா விற்பனை செய்தது.

Loading...

இதே போன்ற இரு நீர்மூழ்கி கப்பல்களை சீனாவிடம் இருந்து வாங்க தாய்லாந்து ஒப்பந்தம் செய்துள்ளது. இதுதவிர சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கும் தனது நீர்மூழ்கி கப்பல்களை விற்பனை செய்ய சீனா ஒப்பந்தம் செய்துள்ளது.

READ  இலவச 4KTV ஜியோ கடைமுன் குவிந்த தமிழர்கள் ! என்ன செய்தால் இலவச 4K டிவி கிடைக்கும் முழு தகவல் உள்ளே !

மேலும் மியான்மார் நாட்டிற்கு நீர்மூழ்கி கப்பல்களை தருவதாக சீனா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. சுற்றிலும் சீனா தனது ராணுவ கரத்தை பரப்பி வரும் நிலையில், இந்தியாவும் தனது அண்டை நாடுகளுடனான ராணுவ உறவை வலுப்படுத்தும் நிலை உருவாகி உள்ளது.

இதனையடுத்து மியான்மார் நாட்டுடனான ராணுவ உறவை வலுப்படுத்த கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தைகள் தொடங்கின. இதில் முதற்கட்டமாக நீர்மூழ்கி கப்பல்களை தகர்க்க உதவும் செய்னா ரக நீரடி வெடிகுண்டுகளை மியான்மாருக்கு விற்பனை செய்ய இந்தியா அரசு 2017-ஆம் ஆண்டில் 38 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஒப்பந்தம் செய்தது.

220 கிலோ எடையும் 50 கிலோ வெடிபொருளுடன், 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கையும் தாக்கும் வல்லமையும் கொண்ட செய்னா நீரடி வெடிகுண்டுகளை கடந்த 13-ஆம் தேதி அன்று இந்தியா அரசு மியான்மாருக்கு விற்பனை செய்தது. இதைத் தொடர்ந்து மியான்மார் நாட்டுக்கு நீர்மூழ்கி கப்பலையும் இந்தியா விற்பனை செய்ய உள்ளது.

READ  நாளை தமிழகம் வரும் அமிட்ஷா, இந்த மூவரில் ஒருவர்தான் தமிழக பாஜகவின் புதிய தலைவர் ஆகிறார். யார் அந்த ஒருவர்?

ரஷ்யாவிடம் இருந்து 1980 ஆம் ஆண்டு வாங்கி இந்தியாவில் நவீனப்படுத்தப்பட்ட ஐ.என்.எஸ். சிந்து வீர் என்ற நீர்மூழ்கி கப்பலை விற்பனை செய்ய இந்தியா அரசு மியான்மர் அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 229 அடி நீளமும், நீருக்கு அடியில் மணிக்கு 37 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறனும் கொண்ட அந்த நீர்மூழ்கி கப்பல் 1988, 1999, 2018 ஆகிய ஆண்டுகளில் நவீனப்படுத்தப்பட்டது.

இப்போது விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில், 3000 டன் எடை கொண்ட அந்த கப்பலை, மியான்மர் நாட்டின் கடற்படைக்கு ஏற்ப புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த சில வாரங்களில் ஐ.என்.எஸ். சிந்துவீர் கப்பலை, இந்திய அரசு முறைப்படி மியான்மர் அரசிடம் ஒப்படைக்க உள்ளது. இதன் மூலம் இந்தியா ஆயுத விற்பனையில் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

READ  இனி இந்தியா குறித்து விமர்ச்சித்தால் இந்தியாவில் இடமில்லை ஆட்டத்தை தொடங்கியது பாஜக …

இவை அனைத்தும் மோடி அரசு எடுத்த முயற்சியினால் சாத்தியம் ஆகியிருக்கிறது. வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், சீனா வரிசையில் தற்போது இந்தியாவும் உலக நாடுகளுக்கு ராணுவ ஆயுதங்களை விற்பனை செய்ய தயாராகிவிட்டது.

©TNNEWS24

இது போன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here