இனி ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை என்றாலும் இனி உங்களுக்கு சீட் உறுதி ! அட்டகாசமான திட்டத்தை அறிவித்தது ரயில்வே !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்நீண்ட தூரம் செல்லும் ரயில்களில் பொதுவாக 3 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். ஏழை, எளிய மக்களின் வசதிக்கேற்ப பொதுப்பெட்டிகளில் பயணக்கட்டணம் இருப்பதால், எப்போதும் கூட்டம் நிறைந்தே காணப்படும்.

யில் புறப்படுவதற்கு நீண்ட நேரம் முன்னரே ரயில் நிலையம் வந்து பொதுப்பெட்டியில் இடம்பிடிக்க காத்துக்கிடப்போரும் உண்டு. வரிசையில் நின்று, தள்ளுமுள்ளுகளுக்கு இடையே சீட் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கும்.

பொதுப்பெட்டியிலும் கூட்டம் நிரம்பினால், வாசலில் அமர்ந்தும், ரயிலின் கூரை மீது ஏறியும் ஆபத்தான பயணம் செய்பவர்களும் உண்டு. இதனை முடிவுக்கு கொண்டுவர ரயில்வே நிர்வாகம் புதிய முறையை கையாண்டுள்ளது.

Loading...

பொதுப்பெட்டியில் பயணம் செய்ய வருபவர்களின் கைரேகையை பெற்று பயோமெட்ரிக் கருவி மூலம் ஒரு டோக்கன் வழங்கப்படும். அதன் அடிப்படையில், பெட்டியின் கதவு திறந்த உடன், பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

READ  இனி சத்தம் போடாமல் இந்திய ரயில்கள் ஓடும் ! அசத்தல் மாற்றம்

பயணிகள் சீக்கிரம் புறப்பட்டு கைரேகையை பதிவு செய்துகொண்டால் சீட் உறுதி என்ற நிலை இருக்கிறது. மேலும், பொதுப்பெட்டியில் எத்தனை பயணிகள், பயணிக்க முடியுமோ அத்தனை பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும். இதன் மூலம், ஆபத்தான பயணங்கள் குறைக்கப்படும்.

மும்பை – லக்னோ இடையே பயணிக்கும் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த திட்டம் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிற நீண்ட தூரம் செல்லும் ரயில்களில் இந்த திட்டம் விரைவில் அறிமுகமாக இருக்கிறது. எனவே, பொதுப்பெட்டியில் பயணம் செய்ய முடிவு செய்தால், சீக்கிரம் சென்றால் உங்களுக்கு சீட் உறுதி.

இந்த திட்டம் பொதுப்பிரிவில் பயணம் செய்யும் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

©TNNEWS24


இதுபோன்ற செய்திகளை உங்களது whatsapp எண்ணில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

READ  அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையின் கழிவறைகள் மூடல் நோயாளிகள் அவதி

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here