திருடிக்கொண்டு ஓடிய திமுகவினர் இந்த முறை உதவியது CCTV அல்ல இஸ்ரோ எப்படி மடக்கி பிடித்தனர் சினிமா பாணியில் விவரிக்கும் காவல்துறையினர் !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

பொள்ளாச்சி.,

சென்னையை சேர்ந்த மனோகரன் (30) லாரி டிரைவரான இவர் கொள்முதல் செய்யப்பட்ட தேங்காய்களை பொள்ளாச்சியில் இருந்து ஏற்றிவருவதற்காக சென்னையில் இருந்து பொள்ளாச்சி சென்றிருந்தார். இதனை அறிந்த 5 பேர்கொண்ட கும்பல் மனோகரனிடம் இருந்து தேங்காயுடன் லாரியை கடத்த திட்டமிட்டுள்ளது.

சரியாக தேங்காய்களை ஏற்றிக்கொண்டு மனோகரன் லாரியில் பொள்ளாச்சி பார்டரை தாண்டியதும், காரில் வந்த கும்பல் மனோகரனிடம் லாரியின் பின்புற டயர் பஞ்சர் ஆகிவிட்டதாக கூறி லாரியை நிறுத்த சொல்லி இருக்கிறது, இதனால் லாரியை ஓரம் கட்டிய மனோகரன் வாகனத்தில் இருந்து இறங்கியதும் கடத்தல் கும்பல் மனோகரனை தாக்கி விட்டு லாரியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டது.

Loading...
READ  விநாயகர் சிலையை அகற்றவந்தவர்களிடம் இரண்டே கேள்விகளை கேட்ட சிறுமி ! மீண்டும் வைத்துவிட்டு தெறித்து ஓடிய காவலர்கள் சமூகவலைத்தளங்களில் வைரல்
திருட்டில் ஈடுபட்டவர்கள் புகைப்படத்தை வெளியிட்டது காவல்துறை.

உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்த மனோகரன் வாகனம் பறிபோனதை குறிப்பிட்டுள்ளார், வாகனம் வாங்கும்போது அதில் GPS கருவி பொருத்தி இருப்பதாகவும் அதன் விவரங்களை சொல்ல இருந்த இடத்தில் இருந்தே வாகனம் (லாரி )எங்கே சென்றுகொண்டிருக்கிறது, காவல்துறையினர் பார்த்துள்ளனர் அதனை காட்டு பகுதிக்குள் கொண்டுசென்ற கும்பல் லாரியின் அடையாளங்களை மாற்ற ஆயத்த வேலைகளில் இறங்கி இருக்கிறது.

அடர்ந்த காட்டு பகுதிக்குள் சென்றதால் GPS மூலம் இருப்பிடத்தை அறியமுடியவில்லை இதனால் பின் தொடர்வதில் சிக்கல் ஏற்பட இஸ்ரோ உதவியை நாடியது தமிழக காவல்துறை, உடனடியாக கடைசியாக தெரிந்த லொகேஷன் விவரங்களை சொல்ல அடுத்த 30 நிமிடத்தில் லாரியின் அடையாளம், இருப்பிடம் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது காவல்துறையினரும் விரைவாக லாரியின் இருப்பிடத்தை நோக்கி சென்று லாரியை திருடிய 4 பேரை கைது செய்தனர், ஒருவன் தப்பிவிட்டான்.

READ  காவி வேஷ்டி கூட பரவாயில்லை இவங்க என்ன அனுப்பிருக்காங்க பாருங்க? கடுப்பான எஸ் ஏ சந்திரசேகர்.

கைது செய்த பிறகுதான் போலீஸாருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது திருட்டில் ஈடுபட்ட இருவர் திமுகவில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் என்று தெரியவர ஷாக் ஆயிருக்கின்றனர், அவர்கள் ஸ்டாலின் உடன் இருக்கும் புகைப்படங்களும் (கோகுல் குமார் , மணிகண்டன் ) தற்போது வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னர் CCTV கேமராக்கள் மூலம் பஜ்ஜி கடை, டீ கடை, பிரியாணி கடை என திமுகவினர் அராஜகம் செய்து சிக்கிய நிலையில் தற்போது இஸ்ரோ மூலம் தேடும் அளவிற்கு பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பதாக இணையத்தில் மீம்கள் உலாவர தொடங்கியுள்ளன.

©TNNEWS24


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here