துபாயில் தமிழ் பெண்களை அதிரடியாக மீட்ட வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் இவரை விமர்சனம் செய்தவர்கள் கவனத்திற்கு !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

துபாய்: துபாயில் வேலை வாங்கித்தருவதாக கூறி அழைத்துச் செல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 4 இளம் பெண்கள் டான்ஸ் பாரில் சிக்கியதையடுத்து அந்நாட்டு போலீசாரால் மீட்கப்பட்டனர்.

துபாயில் வேலை வாங்கித்தருவதாக ஏஜென்ட் மூலம் தமிழகத்தில் கோவையைச் சேர்ந்த 4 இளம் பெண்கள் துபாய் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு வேலைக்கு சேர்ந்த பெண்களை நிறுவன உரிமையாளர்கள் தனியறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததுடன் கட்டாயப்படுத்தி நடன விடுதிகளில் டான் பாரில் ஈடுபடுத்தியுள்ளனர்.

இதுகுறித்து துபாய்க்கான இந்திய தலைமை தூதர் கூறியதாவது.

Loading...

நடன விடுதியில் தள்ளப்பட்ட இளம் பெண்களில் ஒருவர் தாம் ஏமாற்றப்பட்டதை தனது உறவினருக்கு வாட்ஸ் ஆப் ஆடியோ மூலம் தெரிவித்தார்.

READ  ஆந்தைக்கதை சொல்லி பெண்ணை படுக்கைக்கு அழைத்த பியூஸ் மனுஷ் சிக்குகிறார் ! பெண் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

அப்பெண்ணின் உறவினர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

உடன் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வாயிலாக துபாயில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

இந்திய தூதரக அதிகாரிகள் துபாய் போலீசாரிடம் தெரிவித்தனர்.

துபாய் போலீசார் மேற்கொண்ட விரைவான நடவடிக்கை வாயிலாக 4 பெண்களும் மீட்கப்பட்டு, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

நடன விடுதியில் தள்ளிய ஏஜெண்டு, மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என துபாயில் உள்ள இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

இதற்கு முன்பு ஏழை தாய் ஒருவர் தனது மகன் தாய்லாந்து நாட்டில் கொத்தடிமையாக வைத்துள்ளான் என்று வெளியுறவுத்துறைக்கு மனுகொடுத்த சில மணி நேரங்களில் அவரை மீட்டு இந்தியா வர நடவடிக்கை எடுத்தவர் இந்த ஜெய்ஷ்ங்கர்தான்.

READ  கடைசிவரை பதில்சொல்லாமல் தெறித்து ஓடிய ஷாநவாஸ் தெறிக்கவிட்ட சத்யகுமார் !

சில திராவிட கழகம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த சில அரசியல் கட்சியினர் ஜெய்ஷங்கரை தமிழராக ஏற்கமாட்டோம் என்று சொல்லிய நிலையில் தனது செயல்பாடுகள் மூலம் தான் தமிழன் என்பதை நிரூபித்து வருகிறார் ஜெய்ஷங்கர் என்று பாஜகவினர் பதிலடி கொடுத்துள்ளனர்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here