கையும் களவுமாக சிக்கினார் காங்கிரஸ் எம் பி ஜோதிமணி கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சமூகவலைத்தளம்.,

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கரூர் மக்களவை எம். பி யும் தீவிர சிதம்பரம் ஆதரவாளருமான ஜோதிமணி சிக்கிய சம்பவம் இரண்டு நாட்களுக்கு பிறகு தற்போது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.

முன்னாள் மத்திய உள்துறை மற்றும் நிதி அமைச்சராக பொறுப்பு வகித்த பா. சிதம்பரம் கடந்த 22 ம் தேதி அதிரடியாக சி பி ஐ அமைப்பினரால் கைது செய்யப்பட்டார். ஐ என் எஸ் மீடியா ஊழல் வழக்கில் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர். இந்நிலையில் அதற்கு திரைப்பட விமர்ச்சகர் பிரசாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இலங்கை தமிழர் படுகொலையில் தொடர்புடைய யாரும் கடவுளின் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்று பதிவு ஒன்றிணை வெளியிட்டிருந்தார்.

அதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம் பி ஜோதிமணி “போடா முட்டாள்” என்று அவரது பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டிருந்தார், இந்நிலையில் ஒரு மக்களவை உறுப்பினராக இருப்பவர் இப்படி பேசலாமா என்று பலரும் ஜோதிமணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே தான் போட்ட ட்விட்டை டெலீட் செய்து விட்டார்.

READ  மோடி தான் கெத்து மாணவர்கள் முன்னிலையில் வெளுத்துக்கட்டிய பாண்டே ! கடும் கோபத்தில் அந்த கட்சி?

அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை நான் அவ்வாறு பதிவிடவே இல்லை என்றும் பாஜக RSS சங்கபரிவார் அமைப்புகள் தூண்டுதலால் இதுபோன்ற செயலில் பிரசாந்த் ஈடுபடுவதாகவும் குற்றம் சுமத்தினார், இதில் அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள் உங்களது அக்கௌன்ட்டில் இருந்துதான் பதிவு வந்தது இப்படி பொய் சொல்கிறீர்களே என்று அவரை கேள்வி கேட்க பதில் சொல்ல முடியாமல் வாயடைத்துப்போனார் ஜோதிமணி.

இந்நிலையில் இன்று ஜோதிமணிதான் அந்தப்பதிவை போட்டார் என்றும் அவரது அக்கௌன்ட்டில் இருந்துதான் அந்த பதிவு வெளியிட்டபட்டது என்றும் TWITTER விளக்கம் அளித்துள்ளது, இதன் மூலம் நெட்டிசன்கள் ஜோதிமணியை கழுவி ஊற்றி வருகின்றனர். கடந்த வருடம் H ராஜா அட்மின் சர்ச்சை பதிவின் போது நானாக இருந்தால் தொங்கிருப்பேன் என்று ஜோதிமணி கிண்டல் செய்தார், அதனை நக்கீரன், விகடன், ONE INDIA உள்ளிட்ட பத்திரிகைகள் மிக பெரிய அளவில் கிண்டல் செய்து வெளியிட்டன.

READ  காஷ்மீர் இந்தியாவின் பகுதி என உலக நாடுகளில் சிங்கமென கர்ச்சித்த சுஸ்மா அவர்களின் வாழ்க்கை வரலாறு !

தற்போது ஜோதிமணி ஆதரத்துடன் சிக்கியிருப்பதால் எப்போது தொங்க போகிறீர்கள் என அவரை பலரும் கேட்டு வருகின்றனர். ஜோதிமணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஆளூர்ஷாநவாஸ் வக்காலத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரையும் நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

ஒரு சாதாரண விசயத்துக்கு ஏன் இப்படி ஒரு பொய் சொல்லவேண்டும் எங்கயோ இடிக்குதே?

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here