சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்று பிரதமருக்கு கடிதம் எழுதிய மணிரத்தினம் ரேவதிக்கு கங்கனா ரனாவத் செருப்படி கேள்வி பதில் இருக்கா?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

டெல்லி.,

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் ஜெய் ஸ்ரீ ராம் கோசம் போடுவது இந்திய இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக மணிரத்தினம், ரேவதி உள்ளிட்ட 49 நபர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர்.

இந்த செய்தியை தேசிய ஊடகங்கள் முதல் தமிழக ஊடகங்கள் வரை முக்கிய செய்தியாக வெளியிட்டு விவாதங்களை முன்னெடுத்தன, இந்தியாவை தாண்டி அமெரிக்காவை சேர்ந்த முக்கிய ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டு மோடி அரசுக்கு எதிராக பேசிவந்தன.

இந்நிலையில் தற்போது கங்கனா ரணாவத் உள்ளிட்ட 61 முக்கிய நபர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர், அதில் முக்கியமாக 10 குற்றச்சாட்டினை முன்வைத்து, இடதுசாரி அமைப்புகளுக்கு செருப்படி கொடுத்துள்ளனர்.

Loading...
READ  #breaking கவிழ்ந்தது குமாரசாமி கர்நாடக அரசு ! ஸ்டாலினுக்கு அடித்தது அதிர்ஷ்டம் புரியலையா?

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியவர்கள் குறித்த பின்னணியை ஆராய வேண்டும் இவர்கள் திட்டமிட்டு இந்தியாவின் மதிப்பையும், பிரதமர் மோடியின் மதிப்பையும் வெளிநாடுகள் மத்தியில் கெடுக்கும் வண்ணத்தில் செயல்பட்டிருக்கிறார்கள்.

ஜெய் ஸ்ரீ ராம் கோசம் போடுபவர்களை மக்கள் மத்தியில் கெட்டவர்களாக அடையாள படுத்தும் முயற்சில் இந்த அமைப்பினர் இறங்கியுள்ளனர், இந்தியாவில் ஜெய் ஸ்ரீ ராம் கோசம் போடுவது தவறு என்றால், தீவிரவாதிகள் அல்லாஹூ அக்பர் என்று கத்தி கொண்டு பொதுமக்களை கொலை செய்வதை இவர்கள் ஏன் கேள்வி எழுப்பவில்லை.

மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தலில் வீடு புகுந்து இந்துக்கள் கொல்லப்பட்ட செய்தி பத்திரிகைகளில் வந்தபோதும் அதுகுறித்து வாய் திறக்காமல் இந்த அமைப்பினர் வாயை மூடிக்கொண்டு இருந்தது ஏன்?

உத்திரபிரதேசம் அலிகார் பகுதிகளில் இந்துக்கள் உடமையை இழந்து வெளியேற்றப்பட்டபோது வாயை திறக்காதது ஏன்?

READ  PCR சட்டம் குறித்த தீர்ப்பு விளாசித்தள்ளிய ராமதாஸ்.

நமது ராணுவ வீரர்கள் எல்லையில் தீவிரவாதிகளால் சுடப்பட்டு அவர்கள் குடும்பம் நிற்கதி ஆனபோது இந்த 49 நபர்கள் எங்கே சென்றிருந்தார்கள்?

வார்த்தைக்கு வார்த்தை சபரிமலை கோவிலில் பெண்கள் நுழையவேண்டும் என்று பெண்ணுரிமை பேசிய இவர்கள் முத்தலாக் விஷயத்தில் வாய்திறக்காதது ஏன்?

முதலில் இவர்களை போன்ற உள்நோக்கத்துடன் நாட்டின் மதிப்பை திட்டமிட்டு குறைக்க நினைக்கும் அர்பன் நக்ஸல்களை கண்டறிந்து உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு 61 நபர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

தற்போது இந்த ஒவ்வொரு கேள்வியும் மணிரத்தினம், ரேவதி உள்ளிட்ட 49 நபர்களை செருப்பால் அடித்தது போன்று கேள்வியை எழுப்பியுள்ளதாகவும் இதற்கு இவர்களிடம் பதில் இருக்கிறதா என்று சமூகவலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இடதுசாரி அமைப்பை சேர்ந்த 49 நபர்கள் எழுதிய கடிதத்தை தலைப்பு செய்தியாக வெளியிட்ட ஊடகங்கள் ஏன் தற்போது 61 நபர்கள் எழுதிய செய்தியை வெளியிடாமல் இழுத்தடிப்பு செய்வதாகவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

READ  அத்தைக்கு மீசை சீனி சக்கரை சித்தப்பா ஸ்டாலினை பங்கம் செய்த ராமதாஸ்

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உங்களது whatsapp எண்ணில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும். அல்லது இங்கு கிளிக் செய்யவும்


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here