நாங்க ஹோமோ செபியன்ஸ் முனிவர்கள் அல்ல நாடாளுமன்றத்தில் கனிமொழி புது விளக்கம்? என்ன அது ஹோமோ செபியன்ஸ்?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

நாங்க ஹோமோ செபியன்ஸ், முனிவர்களின் பிள்ளைகள் அல்ல, உங்க சாத்திரப்படி சூத்திரர்கள் என்றார் திமுக தூத்துக்குடி எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் கொண்டுவரப் பட்ட தேசிய மனித உரிமை ஆணைய திருத்த மசோதாவின் மீதான விவாதத்தில் திமுக எம்பி கனிமொழி கடுமையான கொந்தளிப்புடன் ஆற்றிய உரையில்; நான் முதலில் என்னை யார் என்று அறிமுகப்படுத்திக் கொள்ள நினைக்கிறன் .

நான் முனிவர்கள் வழியில் வந்தவள் அல்ல. என் மூதாதையர்கள் ஒன்றும் முனிவர்கள் அல்ல. என் மூதாதையர்கள் ஹோமோ செபியன்ஸ் (மனிதர்களின் அறிவியல் பெயர்) என்கிற அறிவியல் வழி வந்தவர்கள். என் பெற்றோர் ஒரு சூத்திரர்கள். கடவுளின் எந்தப் பாகத்தில் இருந்தும் நாங்கள் பிறக்கவில்லை.

Loading...
READ  இந்தியாவின் நிரந்தர நண்பன் ரஷியா ஐ நா சபையில் இந்தியா குறித்து ரஷியா சொல்லிய ஒற்றை வார்த்தை சீனா பாகிஸ்தானிற்கு மரண அடியாக விழுந்துள்ளது.

ஏனென்றால் நாங்கள் சமுக நீதிக்காகவும், மனித உரிமைக்காகவும் போராடுபவர்கள். பெரியாரின் பேத்திகள்

இந்த அரசு என்ஜிஓக்களுக்கு எதிரான மனப்பான்மை கொண்டிருந்தாலும் என்ஜிஓக்கள்தான் மனித உரிமைக் களத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். தலித் உரிமைகளாகட்டும், சிறுபான்மையினர் உரிமைகளாகட்டும், பெண்களின் உரிமைகளாகட்டும் தொண்டு நிறுவனங்களின் பங்கு மிகவும் மகத்தானது. எனவே, தேசிய மனித உரிமை ஆணையத்தில் தகுதியான தொண்டு நிறுவனங்களுக்கு உரிய பங்களிக்க வேண்டும்.

முதலில் முடக்கப்பட்ட என் ஜி ஒ களை மீண்டும் கொண்டுவரும் முயற்சியை செய்யுங்கள் அதன்பிறகு மனித உரிமை மெல்ல வளரும் என்று பேசினார். பலரும் கனிமொழியின் உரையை கவனிக்காமல் சிரித்துக்கொண்டிருந்தது கனிமொழிக்கு மேலும் எரிச்சலை கொடுத்திருக்கும் நாங்கள் பெரியாரின் பேத்திகள் என்ற போது அவையில் சத்தமாக சிரிப்பொலி எழுந்தது குறிப்பிடத்தக்கது.

READ  காஷ்மீர் விவகாரத்தில், இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட பாகிஸ்தானியர்கள்...இங்கிலாந்து போலீசார் தடியடி.

இதனையடுத்து தமிழச்சி தங்கபாண்டியன் கனிமொழியை சமாதானப் படுத்தினார்.

ஆமா கனிமொழி ஏன் திடீரென ஹோமோ செபியன்ஸ் முனிவர் குறித்து பேசினார்?

©TNNEWS24


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here