அதான் 370 வது பிரிவை நீக்கிவிட்டீர்களே, இன்னும் எதற்கு எங்களை வீட்டுச்சிறையில் அடைத்துள்ளீர்கள்..மெகபூபாவின் மகள் வேதனை.

0
இது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த, சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்படும் முன்பு, முன்னெச்சரிக்கையாக ஜம்மு காஷ்மீர் முழுவதும் 8000 ராணுவ வீரர்களை மத்திய அரசு குவித்தது. அதுமட்டுமல்லாமல் காஷ்மீரிய தலைவர்கள் பலரை வீட்டு காவலிழும் வைத்தது மத்திய அரசு.காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய முடிவு செய்த மத்திய அரசு இதனை ரகசியமாக வைத்து வந்தது. இதற்காக கடந்த ஒரு வாரமாக பல அதிரடி நடவடிக்கைகளை காஷ்மீரில் மத்திய அரசு செய்து வந்தது.

ஒரு வழியாக இந்த சட்டப்பிரிவு 370 தை நீக்கி ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கை இரண்டு யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது மத்திய அரசு. இதற்காகத்தான் காஷ்மீரிய தலைவர்களை மத்திய அரசு வீட்டு சிறையில் அடைத்தது. ஏனென்றால் இந்த நடவடிக்கை எடுக்கும் பொது, காஷ்மீரிய பிரிவினைவாதிகளால் கலவரம் நேரிடக்கூடம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

READ  ரம்ஜான் நாளன்று இந்திய ராணுவத்தின் மீது திட்டமிட்டு தாக்குதல் ஸ்ரீநகரில் பதற்றம் !

ஆனால் இந்த நடவடிக்கை எடுத்து ஒரு வார காலமாகியும், காஷ்மீரிய தலைவர்கள் இன்னும் வீடு சிறையிலேயே இருக்கிறார்கள். முன்னாள் முதல்வரான மெகபூபாவின் மகள், உள்துறை அமைச்சர் அமிட்ஷாவிற்கு உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார். அதில், அதான் சட்டப்பிரிவு 370 தை நீக்கிவிட்டிர்களே , பிறகு இன்னும் ஏன் எங்களை வீடு சிறையில் வைத்துளீர்கள், விலங்கை போன்று கூண்டில் அடைந்து கிடப்பது போல் உள்ளது, தயவுசெய்து எங்களை விட்டுவிடுங்கள் என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமிட்ஷா என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here