200 ரூபாய்க்காக 30 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா வந்த கென்யா எம்.பி தன் மக்களுக்கு இந்தியாவை தான் எடுத்துக்காட்டாக கூருவாராம்!

0

தற்போது கென்யா நாட்டில் எம் பி யாக இருப்பவர் ரிச்சர்ட் டாங்கி இவர் தான் கல்லூரி படித்தபோது மளிகை கடைக்காரரிடம் வாங்கிய 200 ரூபாய் கடனை திருப்பி செலுத்த 30 ஆண்டுகள் கழித்து தற்போது இந்தியா வந்துள்ளார்.

ரிச்சர்ட் 1985 முதல் 1989 வரை மஹாராஷ்டிராவில் அவுரங்காபாத் உள்ள பிரபல கல்லூரியில் படித்தார் அவர் படிக்கும் காலத்தில்,

Loading...

அவரே சமையல் செய்து சாப்பிடுவது வழக்கம் அதற்கான பொருட்களை அருகில் உள்ள மளிகை கடை ஒன்றில் வாங்குவார்.

தினமும் அந்த கடையில் பொருட்கள் வாங்க அந்த கடையின் உரிமையாளர் காசிநாத் என்பவருடன் ரிச்சர்டுக்கு நல்ல நட்பு ஏற்பட்டது.

இப்போதுபோல அன்று ஆன்லைன் வசதிகள் இல்லாததால் கென்யாவில் இருந்து ரிச்சர்டின் பெற்றோர் பணத்தை மணி ஆர்டரில் தான் அனுப்புவார்கள்.

அதனால் பணம் வரும் வரை காசிநாதன் மளிகை கடையில் கடனாக பொருட்களை வாங்குவார் தனது பெற்றோரிடமிருந்து பணம் வந்ததும் அதை வைத்து கடனை திருப்பி கொடுத்துவிடுவார்.

READ  நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் ராஜராஜன் மண்ணில் கோவில்கட்டமுடியாத பயங்கரம் , அடியாட்களை கொண்டு மிரட்டும் சர்ச் நிர்வாகம்?

இது நாட்கணக்கில் தொடர காசிநாத் மற்றும் ரிச்சர்ட் நல்ல நண்பர்களாக மாறினார் பின்னர் தனது கல்லூரியின் இறுதிக்காலத்தில் 200 ரூபாய் கடன் பாக்கி இருந்த நிலையில்

அதை செலுத்தாமல் கென்யா திரும்பிவிட்டார். கென்யா திரும்பிய பின்னர் தீவிர அரசியலில் இறங்கிய அவர் இப்பொது எம் பி யாக உள்ளார்.

இந்நிலையில் திடீரென தனக்கு பழைய கடன் நியாபகம் வர உடனே தனது மனைவியை அழைத்துக்கொண்டு இந்தியா வந்தார்.

கடந்த திங்கள் கிழமை மஹாராஷ்டிரா வந்த அவர் பலரிடம் விசாரித்து காசிநாத்தை கண்டு பிடித்தார் , தனது பழைய நண்பனை பார்த்த காசிநாத் அவரை கட்டி தளுவிக்கொண்டார்

அப்போது அந்த 200 ரூபாயை திருப்பி செலுத்திய ரிச்சர்டுக்கு காசிநாத் உணவு அளித்து உபசரித்தார் மேலும் கடந்த 4 நாட்களாக காசிநாத்துடன் தங்கிய ரிச்சர்டுக்கு காசிநாதன் உறவினர்கள் பல பரிசு பொருட்களை அளித்தனர்.

READ  அரெஸ்ட் வாரண்டுடன் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் தெலுங்கானா போலீசார் பிரபலத்தை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவு !

அப்போது பேசிய ரிச்சர்ட் நான் இந்திய மக்களிடம் இருந்து தான் நேர்மையை கற்றுக்கொண்டதாகவும் நான் இந்தியாவில் கற்றுக்கொண்டதை அடிப்படையாக வைத்து தனது ஊரில் மக்கள் முன்னேற்ற பணிகளை செய்து வருவதாகவும் கூறினார்.

அவர் கிளம்பும்போது காசிநாத் மற்றும் அவரின் குடும்பத்தினரை பாஸ்போர்ட் எடுத்துவிட்டு தன்னை தொடர்புகொள்ளுமாறும் நீங்கள் குடும்பத்துடன் கென்யா வந்து அங்குள்ள அனைத்தையும் பார்க்க நான் ஏற்பாடு செய்கிறேன் என்று கூறிச்சென்றுள்ளார்.

இன்றுவேணுமானால் 200 ரூபாய் சிறிய தொகையாக இருக்கலாம் ஆனால் 1989 ஆம் ஆண்டில் அது மிக பெரிய தொகை அதை வைத்து 5 பேர் கொண்ட குடும்பத்திற்கு 1 மாதத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்கலாம்.

செய்திகளை உங்களது whatsapp எண்ணில் இலவசமாக உடனுக்குடன் பெற இங்கு கிளிக் செய்யவும்.

READ  வெளியுறவுத்துறை நடவடிக்கை கைது நடவடிக்கை தீவிரம்.
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here