பாலியல் குற்றவாளியை சவூதி சென்று கைது செய்து இந்தியா இழுத்துவந்த கேரள பெண் IPS அதிகாரி மரண தண்டனை நிறைவேற்றுகிறது மத்திய அரசு.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

கேரள மாநிலத்தின் கொல்லம் பகுதியை சேர்ந்த 38 வயதான சுனில் குமார் பத்ரன் என்பவர் சவூதி அரேபியாவில் டைல்ஸ் செய்யும் பணியில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த சுனில் குமார் மூன்று மாதங்களாக தன் நண்பரின் மகளான 13 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

சுனில் என்பவரால் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி முதலில் தன் பெற்றோரிடம் ஏதும் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளார். பின்னர் சில மாதங்களில் தன் பெற்றோரிடம் தனக்கு நடந்ததைப் பற்றி கூறிய பிறகு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்நேரத்தில், சுனில் குமார் சவூதிக்கு தப்பித்து சென்றுள்ளார்.

READ  " ஹார்லி டேவிட்ஸன் " நிறுவனம் அறிமுகப்படுத்திய பேட்டரி மோட்டார் சைக்கிளின் சிறப்பம்சங்கள்....

அதன்பிறகு அச்சிறுமி கொல்லம் மாவட்டத்தில் கரிக்கோடு பகுதியில் இருக்கும் அரசு காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். எனினும், 2017 ஜூன் மாதத்தில் மனம் உடைந்த போன சிறுமி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முன்பாக, சுனில் குமாரை சிறுமியின் குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்த சிறுமியின் உறவினரும் தற்கொலை செய்து கொண்டார்.

Loading...

2017-ல் அளிக்கப்பட்ட வழக்கில் சுனில் குமார் தொடர்பாக லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியது கொல்லம் போலீஸ். சர்வதேச இன்டர்போல் போலீஸிற்கு தகவல் அளித்தும் பயனில்லை. ஆகையால், எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் வழக்கு கைவிடப்பட்ட நிலையிலேயே இருந்தது. இந்நிலையில், 2019 ஜூனில் கொல்லம் கமிஷனராக பொறுப்பேற்ற மெரின் ஜோசப் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை மீண்டும் தூசித்தட்டி எடுத்தார்.

அதில், சிறுமியின் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து குற்றவாளி தப்பித்து இரண்டு வருடங்களாக சவூதியில் இருப்பதை அறிந்த பிறகு சுனில் குமாரை கைது செய்யும் முயற்சியை மேற்கொண்டார். சவூதியில் உள்ள குற்றவாளியை கைது செய்ய பிற அதிகாரிகளை அனுப்பாமல், கொல்லம் கமிஷனர் மெரின் ஜோசப் மற்றும் அவரது குழு நேரடியாக சவூதியில் உள்ள ரியாத்துக்கு சென்றதாக ஜூலை 17, 2019-ல் செய்தி வெளியாகி இருக்கிறது.

READ  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மீன் இனத்தை பெருக்க புதிய ஐடியா....

இந்த வழக்கில் குற்றவாளியை கைது செய்ய தேவையான அனுமதி, ஆவணங்கள் மற்றும் சிபிஐ-யின் உதவி என முறையாக சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொண்டு குற்றவாளி சுனில் குமார் பத்ரனை மெரின் ஜோசப் மற்றும் அவரின் குழு திட்டமிட்டு கைது செய்து உள்ளனர்.

குற்றவாளி கைது செய்யப்பட்ட தகவலை கொல்லம் போலீசார் ட்விட்டரில் ஜூலை 18-ம் தேதி பதிவிட்டு உள்ளனர்.

திரைப்படங்களில் வரும் காவல் அதிகாரிகள் போன்று குற்றவாளியை கைது செய்ய மெரின் ஜோசப் ஐபிஎஸ் செயல்பட்டதாக பாராட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன. அவரின் முயற்சிக்கு கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.

இந்நிலையில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் மோடி அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளதால் குற்றவாளிக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

READ  இந்திய வரலாற்றை மாற்றி அமைத்த மோடி ! வல்லரசு நாடுகளுக்கு இணையாக ஆயுத ஏற்றுமதியை தொடங்கியது இந்தியா !

இதுபோன்ற செய்திகளை உங்களது whatsapp எண்ணில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here