டோனியின் சாதனையை நெருங்கிக் கொண்டிருக்கும் கொலி…

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்குதொடங்க இருக்கும் இந்த போட்டியையொட்டி விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

விராட் கோலி புதிய சாதனை ஒன்றை நெருங்கிக்கொண்டிருக்கிறார் . இந்த டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றால், இதுவரை அதிக முறை டெஸ்ட் தொடர்களில் வெற்றி தேடித்தந்த தோனியின் சாதனையை கோலி சமன் செய்து விடுவார். அடுத்த போட்டியிலும் வெற்றி பெற்றால் தோனியின் சாதனையை கோலி முறியடித்து விடுவார்.

READ  அடுத்த ஆண்டு முதல் இந்தியர்களுக்கு, ஆன்-அரைவல் -விசா வழங்கும் நாடுகளின் பட்டியல் இதோ...

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட டோனியின் தலைமையில் இந்திய அணி 60 டெஸ்டுகளில் விளையாடி அதில் 27-ல் வெற்றிகளை கண்டுள்ளது. விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி 46 டெஸ்டுகளில் பங்கேற்று அதில் 26 வெற்றிகளை கண்டுள்ளது.. மேலும் 10-ல் தோல்வியையும், 10-ல் டிராவும் சந்தித்துள்ளது. இந்த சாதனை பட்டியலில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 3 வது இடத்தில் உள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்தியாவின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும். ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸ் அணி 2002ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிரான டெஸ்டுகளில் வெற்றி பெற்றதில்லை. அதாவது இந்தியாவுக்கு எதிராக 21 டெஸ்டுகளில் ஆடி அதில் 12ல் தோல்வியும், 9 ல் டிராவும் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...
READ  கச்சத்தீவு இந்தியாவின் பகுதியாக இருந்தது இல்லை என்று சொன்ன பா.சிதம்பரத்திற்கு, TN நியூஸ் 24 யின் பதில்கள்.

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here