பெற்றோர்கள் திட்டியதால் விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு சென்ற மாணவிக்கு நேர்ந்த கொடுமை…

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

மதுரை மாவட்டம் சூரத்தூர்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மகள் காயத்ரி, வயது 15, இவர் ஒரு அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். காயத்திரிக்கு விளையாட்டு என்றால் ரொம்ப ஆர்வமாம், நிறைய விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு நிறைய பதக்கங்களை பெற்றுள்ளார்.

விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டதால் படிப்பில் அந்த அளவிற்கு ஆர்வம் இல்லாமல் போய்விட்டதாம். இதனால் இனிமேல் விளையாட்டு வேண்டாம், படிப்பில் கவனம் செலுத்து என்று மகள் காயத்திரியை பெற்றோர்கள் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்து போன காயத்ரி, நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்துள்ளார். பின்னர் அப்படியே புறப்பட்டு வழக்கம் போல் தோழிகளுடன் சேர்ந்து பள்ளிக்குச் சென்றுள்ளார்.

READ  துபாயில் இருந்து பறந்து வந்த மாப்பிள்ளை வீட்டில் தொங்கிய பெரியார் வீரமணி படம் என்னதுசுந்தரவள்ளியா தெறித்து ஓடிய மாப்பிள்ளை?

பள்ளிக்கூடத்தின் அருகில் சென்ற போது திடீரென காயத்திரி மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகளும், அக்கம் பக்கத்தினரும் காயத்திரியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு , மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மதுரைக்கு செல்லும் வழியிலேயே காயத்திரி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here