பாஜகவில் இணைவது குறித்து மாரிதாஸ் விளக்கம் !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சமுகவலைத்தளம்.,

பாஜகவில் மாரிதாஸிற்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படுவது குறித்து நமது இணையதள பக்கத்தில் சிறப்பு செய்தி ஒன்றிணை இன்று காலை வெளியிட்டிருந்தோம். அது குறித்து எழுத்தாளர் மாரிதாஸ் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

அரசியல் காட்சிகளில் இணைந்து பணியாற்ற தனக்கு விருப்பம் ஆனால் தனக்கான பணி என்னவென்று குறித்து செயல்பட்டால் மட்டுமே அரசியல் களத்தில் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறி இருக்கிறார் மேலும் வெறும் பதவியினை பெற்று அமைதியாக இருக்க விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் காட்சிகளில் இணைவது குறித்து மாரிதாஸ் அவர்களின் முழு விளக்கம் :-

Loading...

அனைவருக்கும் வணக்கம் ;

அவ்வப்போது அரசில் கட்சிகளில் இணைவது சார்பாகத் தகவல்கள் பரவுவது வாடிக்கை ஆகிவிட்டது – அவை அனைத்திற்கும் என் பக்க விளக்கம் இதுவே. அரசியல் கட்சிகளில் இணைவது என்று முடிவெடுத்துவிட்டால் என்ன பெரிய பிரச்சனை இருக்கிறது போய்ச் சேர்ந்துவிட வேண்டியது தான். ஆனால் என் கேள்வி

READ  BCCI அறிவிப்பு ஹோலியின் கருத்தை ஏற்கமுடியாது. இவர்களில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார் தெரியுமா?

அரசியல் கட்சியில் இணைந்துவிட்டு என்ன செய்ய வேண்டும்???? இந்த கேள்விக்குச் சரியான , தெளிவான விளக்கமான பதில் தேவை. அதாவது கட்சியில் இணைவது இருக்கட்டும் அங்கே எனக்கு என்ன வேலை இருக்கிறது நான் என்ன செய்ய வேண்டும் இது தான் கேள்வி.

அதாவது இணைந்து அடுத்த 2 வருடங்கள் இல்லை 1 வருடம் இந்த இந்த வேலை எல்லாம் மாரிதாஸ் செய்ய வேண்டும் – அதற்கு முழு திட்டம் வேண்டும் அதை எப்படிச் செயல்படுத்துவது என்று விரிவான ஆய்வு வேண்டும். சும்மா மாநில பொறுப்பை வாங்கி பதவிகள் போல் பின் புறத்தில் போட்டுக் கொண்டு – அதற்கு ஒரு visiting card அடித்து அதை பத்து பேரிடம் கொடுத்துக் கொண்டு கல்யாணம் காதுக் குத்துக்குச் சென்று வணக்கம் வைத்துக் கொண்டு, தலைவர்களுடன் புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டு பெருமை பேசிக்கொண்டு இருக்க முடியாது.

READ  இப்போ தெரியுதா ஸ்டாலினால் சட்டையை கிழித்து கொண்டு தெருவில் தான் ஓடமுடியும் பங்கம் செய்த அன்புமணி !

நான் வேலை செய்ய விரும்புகிறேன் அதுவும் முழு நேரம் களத்தில். அதற்கு வழி இருந்தால் அதற்கு வாய்ப்பு இருக்கும் என்றால் நிச்சயம் அரசியலில் இருப்பேன். அரசியல் உள்ளே வர விரும்புகிறேன் ஆம்… ஆனால் அதை மக்கள் சேவைக்கான வாய்ப்பாக அங்கே உழைக்க விரும்புகிறேன்.

அதனால் நான் சொல்ல விரும்புவது அப்படி அரசியல் கட்சியில் இணைகிறேன் என்றால் நானே அறிவிப்பு வெளியிடுவேன். தயவு கூர்ந்து யூகத்தின் அடிப்படையில் கருத்துக்களை பரப்பவேண்டாம். நான் அரசியல் உள்ளே சரியான நேரத்தில் இருப்பேன்.

நன்றி.

-மாரிதாஸ்

இதன்மூலம் அரசியல் களத்தில் முழு நேரம் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே அரசியல் களத்தில் இருப்பேன் என்று தெளிவுபடுத்தியிடுகிறார். மாரிதாஸ்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

READ  ஒன்று சேர்ந்த இந்து சக்தி ! வக்கிரபுத்திக்காரனின் உயிர் ஊசல் திருச்சியில் கைது

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here