தமிழக பாஜகவில் மாரிதாஸிற்கு புதிய பொறுப்பு !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

தமிழக பாஜகவில் மாரிதாஸிற்கு புதிய பொறுப்பு !

சென்னை.,

சமூக வலைத்தளங்களில் திமுக, கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சிகளின் பொய் மற்றும் வெறுப்பு பிரச்சாரங்களுக்கு ஆதாரங்களுடன் வீடியோ வெளியிட்டு பதிலடி கொடுத்து வருபவர் எழுத்தாளர் மாரிதாஸ்.

திராவிட கழகங்கள் குறித்து தனது கருத்தினை பதிவிட்டு அவர் வெளியிட்ட விடீயோக்கள் பல தரப்பிலும் பகிரப்பட்டு வந்தது குறிப்பாக பெரியாருக்கு விருதுகள் வழங்கப்படவில்லை என்பதில் தொடங்கி திமுக இந்து எதிர்ப்பு பிரச்சாரம் முதலானவற்றை மாரிதாஸ் எடுத்துக்காட்டி வந்துள்ளார்.

Loading...

இந்நிலையில் தற்போது மாரிதாஸிற்கு தமிழக பாஜகவில் முக்கிய பொறுப்புகள் வழங்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் செயல்படும் பாஜக ஆதரவாளர்கள் மற்றும் வலது சாரிய சிந்தனை கொண்டவர்கள் தங்கள் கருத்தினை பதிவிட்டு வந்தனர். மேலும் தங்கள் கருத்துக்களை டெல்லி தலைமைக்கு மெயில் மூலமும் அனுப்பினர்.

READ  சொன்னபடி திமுக குறித்த ஆதாரங்களை வெளியிட்டார் மாரிதாஸ் ! என்ன பதில் சொல்லப்போகிறது திமுக?

தமிழகத்தில் உள்ள அரசியல் சூழலில் இளைஞர்கள் மற்றும் கட்சிக்கு உழைக்கக்கூடிய இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கவேண்டும் என்று அதில் வலியுறுத்தியும் இருந்தனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக பாஜக தலைவர் மாற்றத்தின் போது மாரிதாஸிற்கு முக்கிய பதவியினை அளிக்க டெல்லி தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்னும் 30 முதல் 40 நாட்களுக்குள் தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் நியமிக்க பட இருப்பதால், புதிய தலைவர் நியமனத்தின் போதே மாரிதாஸிற்கு பொறுப்புகள் வழங்கப்படும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. அது நிச்சயம் அதிகாரம் உள்ள பொறுப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த தகவல் வெளியானது முதல் சமூகவலைத்தளங்களில் அவரது ஆதரவாளர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பு – மாரிதாஸ் ரஜினி கட்சி தொடங்கியதும் அதில் இணைவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருப்பதாக முன்பு தகவல்கள் வெளியாகிவந்ததும் குறிப்பிடத்தக்கது.

READ  #BREAKING புதிய தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு வெளியாகிறது !

©TNNEWS24

எங்களது செய்திகளை உங்களது வாட்சாப் எண்ணில் உடனுக்குடன் இலவசமாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்பில் ACT FREE என்று அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here