சொன்னபடி திமுக குறித்த ஆதாரங்களை வெளியிட்டார் மாரிதாஸ் ! என்ன பதில் சொல்லப்போகிறது திமுக?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சமூகவலைத்தளம்.,

எழுத்தாளர் மாரிதாஸ் தொடர்ந்து தனது கருத்தினை சமூகவலைத்தளங்கள் மூலம் தமிழக மக்களை சென்றடையும் வண்ணம் வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் திமுக ஒன்றும் இந்து மதத்தின் எதிரியல்ல என்று ஸ்டாலின் கூறிய தகவல்களுக்கு திமுக எவ்வாறு இந்து மதத்தினை அழித்து கிறிஸ்துவ மதத்தினை வளர்த்து வந்தது என்ற புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து மாரிதாஸ் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு :-

திமுக ஆட்சியில் இந்து கோவில் நிர்வாகம் அருமையாகச் செய்யப்பட்டது என்ற பொய் கதைகளை முடிந்த அளவு பரப்பும் வேலையை ஒருபக்கமும் , இன்னொருபக்கம் தனது மனைவிகளைக் கோவிலுக்குச் சென்று வழிபடச் செய்து அந்த புகைப்படத்தை வெளியிட்டும் இந்துக்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்று காட்ட முயற்சிக்கும் திமுக தலைமையின் முயற்சிக்கு – வெக்கம் ஏதும் இல்லாமல் அங்கே உள்ள இந்துமத ஆன்மீக நம்பிக்கையில் நம்பிக்கை கொண்ட சிலர் முட்டுக் கொடுப்பதைக் காண்கிறேன்.

READ  பெரியார் மண்ணிலா இப்படி ஒரு கொடுமை நடந்தது அறிக்கை வெளியிட்ட வீரமணி

தமிழகத்தில் இன்று திரும்பிய பக்கம் எல்லாம் ஏசு ஜெப ஆராதனை மையம் கூட்டம் நடக்கும் இடம் என்று எவ்வளவு இடங்கள் புதிதாக இருக்கின்றன என்று நீங்கள் இருக்கும் இடத்தை சுற்றி பாருங்கள் அவை அனைத்திற்கும் அனுமதி கொடுத்ததும் , இடங்கள் வாங்கப்பட்டதும் 2006-2011 வரையிலான கருணாநிதி அவர்கள் ஆட்சிக் காலத்தில் தான். அவை சுமார் 8000 முதல் 12000 இடங்கள் ஆகும்.

{நான் எந்த மததினருக்கும் எதிரானவன் அல்ல. ஆனால் பிசினஸ் போல் வெளி நாட்டு நிதியை வாங்கி அதை வைத்து ஆள் பிடிக்கும் வேலையை செய்வதற்கு – இங்கே தோன்றிய இந்துகளின் ஆன்மீக நம்பிக்கையை அழிக்கும் எவரையும் பொறுத்து கொள்ள முடியாது.}

அதாவது கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் இந்து மத ஆன்மீக நம்பிக்கையை மெல்ல விஷம் வைத்து அழித்து கொலை செய்யும் வேலையை திமுக திக இரண்டு – மதம் மாற்றும் மாபியாக்கல் மூலம் இணைந்து செய்தன.

READ  உள்ளாட்சி தேர்தலில் மோடி எதிர்ப்பை சொல்லி ஓட்டு கேட்டால் பொதுமக்கள் விரட்டி அடிப்பார்கள் புது திட்டம் தீட்டிய திமுக !

இன்று நாடகம் ஆடுகிறார்கள். இந்த பூதம் எழுந்திருக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இந்து மத ஆன்மீக நம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கும் வேலைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் ஆட்சியர் இந்தியாவிலேயே திமுக ஆட்சி தான். அதை உணர வேண்டிய ஆதாரங்களை சீக்கிரம் வெளியிடப்படும்.

சீக்கிரம் ஸ்டாலின் சபரிமலைக்கு மாலை போட வைக்கிறேன் இல்லை அவர் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதை முழு கனவாக மாற்றுகிறேன்.

-மாரிதாஸ்

இவ்வாறு மாரிதாஸ் திமுக குறித்த தனது கருத்தினை மிகவும் ஆழமாக வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து மாரிதாஸ் வெளியிட்ட வீடியோ

©TNNEWS24

இது போன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

READ  அதிரடி சந்தானத்தின் வருகை பாமகவினருக்கு மகிழ்ச்சியையும் திமுகவினருக்கு வருத்தத்தையும் தரும். நிறைவேறிவிட்டது.

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here