இரவோடு இரவாக அடுத்த கட்டத்தை எட்டிய மாரிதாஸ் – பியூஸ் மனுஷ் மோதல் !

0
இது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

சமூகவலைத்தளம்.,

காஷ்மீர்.,

ஜம்மு காஷ்மீர் குறித்து அதன் அரசியல் தன்மை குறித்தும் மாரிதாஸ் சமூகவலைத்தளம் மூலம் தமிழக மக்கள் எவ்வாறு புரிந்துகொள்ளவேண்டும் என்று எடுத்துரைத்தார். அது பெரும்பான்மையான மக்களை சென்றடைந்தது.

மாரிதாஸ் வெளியிட்ட வீடியோ :-

அதனை தொடர்ந்து இயற்கையியல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் மாரிதாஸ் பொய் சொல்வதாகவும், காஷ்மீர் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தும் வேண்டுமென்றே மத பிரச்னையை தூண்டும் விதமாக விடீயோக்களை வெளியிட்டு வருவதாகவும் அவரை காவல்துறை கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

அந்த வீடியோ :

அதனை தொடர்ந்து பியூஸ் மனுஷிற்கு மாரிதாஸ் ஒரு பதிலடியினை கொடுத்தார்

மாரிதாஸ் இஸ்லாமியருக்கு எதிராக மதக்கலவரம் தூண்டும் விதமாகப் பேசுகிறார் என்று தகவல் பரப்புவதன் மூலம் இஸ்லாமியரை எனக்கு எதிராகத் தூண்டிவிடத் துடிக்கும் பியூஸ் முயற்சி கீழ்த்தரமானது. நான் வெளியிட்ட வீடியோவில் தவற்றை எடுத்துப் பேசி இது இது தவறு தகவல் தவறு என்று பேசுங்கள் அதில் ஒரு நியாயம் இருக்கிறது, அதில் ஒரு ஆரோக்கியமான சிந்தனை இருக்கிறது – அதைவிட்டு விட்டு இஸ்லாமிய நண்பர்களைத் தூண்டிவிட இந்த கீழ்த்தரமான புத்தி ஏன் போகிறது????

“இந்த நாட்டின் மக்கள் மதம் , மொழி , இனம் , ஜாதி , கட்சி என்ற எந்த சார்பும் இல்லாமல் ஒன்றுபட்டு நின்று ஆளும் அரசுக்கு 370 சிறப்பு அதிகாரத்தைத் திரும்பப் பெற்ற இந்த நேரத்தில் முழு ஆதரவை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தேசம் காப்பது கடமை” என்று தான் மக்களைக் கேட்டுக்கொண்டவன் நான்.

மேலும் எங்கேயும் நான் எந்த நேரத்திலும் எந்த மதத்தினருக்கும் அவர் தம் நம்பிக்கைக்கு எதிராகப் பேசியவன் கிடையாது. எனக்கு இந்த நாட்டில் உள்ள ஒரு இஸ்லாமியக் குழந்தை தொட்டு அனைத்து குழந்தைகள் எதிர்காலம் அவர்களிடம் கொடுக்கப் போகும் நாளைய இந்தியாவின் ஆரோக்கியம் சார்ந்தே என் செயல்கள் இருக்குமே ஒழிய அது மதம் மொழி இனம் ஜாதி என்ற வட்டத்திற்குள் இருக்காது. அதே நேரம் போலியான மதச்சார்பின்மை பேச முடியாது.

READ  ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ஹாஷ்டாக் அனைத்தையும் விவாதம் நடத்தும் தமிழக ஊடகங்கள் இன்று இரவு விவாதம் நடத்துமா?

எனவே நான் சொல்லிக் கொள்ள விரும்புவது “முடிந்தால் ஆண் மகனாக இருந்தால் காவல் நிலையம் சென்று புகார் அளித்து நான் எதாவது மதத்தினருக்கு எதிராகப் பேசியவன் என்று நிரூபித்துக் காட்டவும்”. அப்படி நான் குறிப்பிட்ட எந்த மதத்தினருக்கும் எதிரானவன் என்று நீங்கள் நிரூபித்தால் நானே தூக்கில் தொங்கத் தயார் – இல்லை நீங்கள் தூக்கில் தொங்கத் தயாரா ????

இஸ்லாமிய நண்பர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது “உங்கள் சமூகத்தை ஒரு அடி தடி கூட்டம் போல் இவர் போன்றவர்கள் நினைக்கிறார்கள் . உங்களை ஏவி விட்டால் , தூண்டிவிட்டால் போதும் அவர்களுக்கு எதிரானவர்களை உங்களுக்கு எதிரானவராக மாற்றினால் நீங்கள் கண்மூடித் தனமாக முடிவு எடுப்பீர் என்று நினைக்கிறார்கள். இந்த மன நிலையில் திமுக முதல் இந்தவிதமான நாட்டிற்கு எதிரான கூட்டம் வரை இருக்கிறது அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எளிமையாக உணர்ச்சி வசப்படாது இந்த மாதிரி ஆட்களை உங்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்காது – அப்துல்கலாம் போல் சிறந்த தேசியவாதிகளாகத் தேசம் காப்பதே கடமை என்று மதம் மொழி இன உணர்வு கடந்து ஒன்று பட்டு நில்லுங்கள். இது நமது தேசம். இதைச் சிதைக்கும் எண்ணம் கொண்ட எந்த ஓநாய்களும் வேட்டையாடப்பட வேண்டியது. அந்த ஓநாய்கள் நாட்டிற்கு உள்ளே இருந்தாலும் சரி வெளியிலிருந்தாலும் சரி விரட்டி அடியுங்கள்”.

அப்புறம் பியூஸ் அந்த வீடியோ share மட்டும் 50ஆயிரம் நோக்கி செல்கிறது… மக்களுக்கு உண்மை மெல்ல புரிய ஆரம்பிக்கிறது… கூல்…. பரப்பும் நபர்களில் பலருமே நம்ம காவல் துறையினர் தான். இது எப்படி இருக்கு!

-மாரிதாஸ்

அடுத்தகட்ட மோதல்

READ  மோடி வெற்றியை பொறுத்து கொள்ளமுடியாமல் விஷம் குடித்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வினோஜ் உயிர் பிழைத்தார்.

வீட்டு அட்ரஸை கொடு மாரிதாஸ் :-

அதனை தொடர்ந்து நான் புகார் அளிக்க உன்னுடைய அட்ரஸ் வேண்டும் கொடு என்று மாரிதாஸிடம் பியூஸ் மனுஷ் கேட்க மேலும் இருவருக்கும் இடையேயான மோதல் அடுத்த கட்டத்தை அடைந்தது.

அந்த வீடியோ :-

பியூஸ் மாரிதாஸின் முகவரியை கேட்டதும் அதற்கு மாரிதாஸ் தெரிவித்த கருத்து :-

பியூஸ் மனுஷ் உங்களுக்கு நான் இன்று மாலை 6 மணி வரை நேரம் கொடுக்கிறேன். அதற்குள்ளாக என் மீது FIR போலீஸ் நிலையத்தில் பதிவு செய்து நீங்கள் பொது வெளியில் சொன்னதை நிரூபிக்க வேண்டும். இல்லை உங்கள் மீது நான் வழக்குப் பதிவு செய்வேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். பியூஸ் மீது வழக்கு தொடர காவல்துறை நண்பர்கள் கேட்டுகொண்டதால் அவர் மீது என் பக்க வழக்கைப் பதிவு செய்ய விரும்புகிறேன். இன்று மாலை வரை அந்த பதிவை நீக்க வேண்டாம் என்று அன்புடன் பியூஸ் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

புகாரினை பொது வெளியில் வைக்கிறேன்:

“இஸ்லாமிய மக்களைப் படுகொலை செய்ய நான் தூண்டுவதாகத் தவறான தகவலை வேண்டும் என்றே உள் நோக்கத்துடன் பியூஸ் மனுஸ் பரப்புவதால் அது ஒன்று சமூகத்தின் மத அமைதிக்கும் , இரண்டு என்னுடைய தனிப்பட்ட பாதுகாப்பிற்கும் குந்தகம் விளைவிக்கும் என்பதால் நான் அவர் மீது இந்த புகாரை அளிக்கிறேன். நான் என் தாய் நாட்டினை என் உயிர் போல் நேசிக்கிறேன் மதம் மொழி இனம் ஜாதி அனைத்தையும் தாண்டி ஒவ்வொரு இந்தியக் குடும்பத்தின் வாழ்வும் நலம் பெற வேண்டும் என்பதுவே என் நோக்கம். ஆனால் இவர் போன்ற தேசத்திற்கு எதிரான கருத்துக்களை, சிந்தனைகளைப் பரப்ப முயற்சிக்கும் நபர்கள் என் போன்றவர்களை குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிரானவர் என்று பரப்பி அதன் மூலம் தன் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை மதக் கலவரமாக மாற்ற இவர் முயல்கிறார். அதுவும் காஷ்மீர் விவகாரம் நாடு முழுவதும் பரவியுள்ள இந்த அசாதாரண சூழலைப் பயன்படுத்தி மத கலவரத்தை நடத்த தூண்டுகிறார் பியூஸ் என்று நான் சந்தேகம் கொள்கிறேன். எனவே இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிப்பிற்குரிய தமிழகக் காவல்துறையைக் கேட்டுக் கொள்கிறேன்”.

READ  இந்தியர்களை பற்றி கருத்து ஒன்றை பதிவிட்ட இங்கிலாந்து நிறுவனம் இப்போ ட்விட்டரில் இது தான் ட்ரெண்ட் !

இதுவே என் புகாரின் விவரம்.


பியூஸ் இப்போது நீங்க மரியாதையா போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் அளிக்கறிங்க , இல்லை நான் புகார் அளிக்கிறேன்.

மாலை 6 மணி மறந்துவிட வேண்டாம்..

BaBa countdown starts..

-மாரிதாஸ்.

இவ்வாறு இருவருக்குமான மோதல் அடுத்த கட்டத்திற்கு சென்றுகொண்டிருக்கிறது ஆனால் இதுவரை பியூஸ் மாரிதாஸ் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை குறிப்பாக அவர் வீடியோவில் கலவரத்தை தூண்டும் விதமாக எதுவும் பேசவில்லை என்றே பலரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

இன்னும் ஒரு சிலரோ என்று போத்தீஸ் விவகாரத்தில் பியூஸ் சிக்கியதில் இருந்து முன்பு போல அவரை யாரும் பெரிதாக ஏசுத்துக்கொள்வது இல்லை, இதனால் தன்னை அடையாளப்படுத்தி கொள்ள இதுபோன்ற வேலைகளில் பியூஸ் ஈடுபட்டு வருகிறார். எல்லாம் பணம் படுத்தும் பாடுதான் என்றும் விமர்ச்சித்து வருகின்றனர்.

மாரிதாஸ் மத கலவரத்தை தூண்டுவதாக பேசிய பியூஸ் இதுவரை இந்து கடவுள்களை எத்தனை இடங்களில் கேவலமாக விமர்ச்சித்து மத கலவரத்தை தூண்டி இருக்கிறார் என்ற வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது ,

இதனால் பியூஸ் மனுஷ் மீது தமிழகம் முழுவதும் வழக்கு பதிய வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மாரிதாஸை மிரட்ட போயி இப்போது சிக்கலில் சிக்கி இருப்பது நம்ம பியுஷ் மனுஷ் தான் போல !

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here