காவல் தெய்வத்திற்கு செருப்புமாலை வன்னியர் பகுதிகளில் கடும் பதற்றம்.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் கூத்தப்பாடி கிராமத்தில் ஊர் எல்லை காவல் தெய்வமானமுனிப்பன் சிலைக்கு சில சமூக விரோதிகள் செருப்பு மாலை அணிவித்துள்ளனர். இதனால் இந்து மக்கள் மிக பெரியளவில் சாலையில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூத்தப்பாடி கிராமத்தில் வன்னியர் சமூகத்திற்கு சொந்தமான காவல்தெய்வம் முனியப்பசாமி சிலைக்கு அடையாளம் தெரியாத மாற்று மத கும்பல் செருப்பு மாலை அணிவித்ததுடன் அசிங்கத்தையும் சிலையின் மீது ஊற்றி அவமானம் செய்துள்ளனர்.

தொடர்ந்து தமிழகத்தில் நாத்திகம் இந்துமத எதிர்ப்பு என்ற பெயரில் தொடர்ந்து இந்து மதத்தை சேர்ந்த கடவுள்கள் அவமானப்படுத்த பட்டு வருகின்றன. தொடர்ந்து ஒவ்வொரு சமூகத்தினரின் குலதெய்வங்களும் அவமானப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

Loading...
READ  திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்க வாய்ப்பு ! உச்சநீதிமன்றத்தில் களம் இறங்கியது பாஜக !

தற்போது குல தெய்வம் அவமானப்படுத்தப்பட்ட செய்தி வெளியானதில் இருந்து வன்னியர் சமூகத்தை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் கடும் பதற்றம் நிலவுகிறது, இனியாவது சாதிகளை கடந்து அனைத்து இந்துமதத்தை சேர்ந்தவர்களும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே இந்து கலாச்சாரத்தை காப்பற்ற முடியும் என்ற தேவை எழுந்துள்ளது.

இதற்கிடையில் சீமான், திருமுருகன் மற்றும் இன்னும் பலர் கருப்பனும் , முனியசாமியும்தான் எங்கள் தமிழ் கடவுள்கள் என்று சொல்லிவந்தவேளையில் இதற்கு எதிராக குரல் கொடுப்பார்களா என்ற கேள்வியும் மேலோங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here