இன படுகொலை நாள் ஒன்று சேர்ந்த உலக தமிழர்கள் ராகுல், ஸ்டாலினுக்கு சாபம்.

0

இன படுகொலை நாள் ஒன்று சேர்ந்த உலக தமிழர்கள் ராகுல், ஸ்டாலினுக்கு சாபம்.

சமுகவலைத்தளம்.,

Loading...

இன்று மே -18 உலகில் உள்ள அனைத்து தமிழ் இனமும் கண்ணீர் விட்டு கதறிய நாட்களில் ஒன்று. இலங்கையில் சிங்கள அரசின் அரசியலுக்கு தமிழ் பேரினம் பலியாகிய நாள்.

உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் தங்கள் எதிர்ப்பை இணையத்தில் பதிவிட்டு, தங்கள் எதிர்ப்பை ராஜபக்சே மற்றும் இலங்கை அரசிற்கும் தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழ் இனப்படுகொலைக்கு காரணமாக இருந்ததாக காங்கிரஸ் மற்றும் திமுக அரசுகளின் மீதும் தமிழ் மக்கள் சாபம் கொடுத்துள்ளனர்.

ட்விட்டரில் நாச்சியார் தமிழச்சி எனும் பக்கத்தில். ஒட்டு மொத்த தமிழ் இன அழிப்பிற்கு காரணமான ராஜ பக்சே இன்று அவன் கட்சியிலே இல்லாமல் மூன்று கட்சிகள் மாறி அடையாளமற்ற நபராக மாறிவிட்டான். அதனை தொடர்ந்து இந்தியாவில் காங்கிரஸ் கட்சியும், தமிழகத்தில் திமுகவும் நிச்சயம் ஆட்சி பொறுப்பில் அமராது ! இது தமிழ் இனத்தின் சாபம் நிச்சயம் உங்களை அளிக்கும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர். பலரும் ட்விட்டரில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரை குற்றம் சுமத்தி வருகின்றனர். பலர் ஒருபடி மேலே சென்று தமிழ் இனத்தின் பெயரை சொல்லி தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் ஓட்டு பிச்சை எடுப்பதாகவும், அவர்களை தமிழ் மக்கள் அடையாளம் கண்டு ஒதுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

READ  உஷாரான தமிழர்கள் பழையபடி பானிபூரி விற்க செல்லும் பியூஸ் மனுஷ் அதுதான் இந்த மாற்றமா?

தற்போது தமிழக அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #MAY18tamilgenocide என்ற ஹாஸ்டக் ட்ரெண்டிங்கிலும் உள்ளது.

©TNNEWS24

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here