போலி மருத்துவர், மருத்துவ முறைகேடுகளை சித்தரிக்கும் கதை…” மெய் ” படம் 23ஆம் தேதி வெளியாகிறது.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சுந்தரம் ப்ரொடக்க்ஷன் சார்பில், பிரீத்தி கிருஷ்ண தயாரித்துள்ள படம் ” மெய் ” நிக்கி சுந்தரம் இந்த படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.இவர் டி.வி.எஸ். சுந்தரம் குடும்பத்தை சேர்ந்தவர். ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.அஜைகோஷ், கிஷோர், சார்லி உள்ளிட்ட பிரபலங்களும் இப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை எஸ்.ஏ பாஸ்கரன் டைரக்ட் செய்துள்ளார்.

நடிகர் சார்லி பேசியதாவது, ” மெய் ” படம் நன்றாக வந்துள்ளது. இந்த படத்தை மிகவும் திறமையான இயக்குனர் பாஸ்கரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அறிமுகமாகியுள்ள கதாநாயகன் நிக்கி சுந்தரம் மிகவும் திறமையான நடிகர். அவரிடம் கடின உழைப்பும், சினிமாவை நேசிக்கும் குணமும் இருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் மறுபடியும் நடிக்க வேண்டுமா என்று கேட்டு கேட்டு நடித்தார். அவர் வருங்காலத்தில் பெரிய நடிகராக வருவார். மெய் படம் உலக அளவில் பாராட்டை பெரும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று சார்லி கூறினார்.

READ  விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால், இவ்வளவு ரூபாய் பரிசா...? அரசின் அதிரடி திட்டம்

கதாநாயகன் நிக்கி சுந்தரம் பேசியதாவது, நான் அமெரிக்காவில் படித்தேன் ஆனாலும் தமிழ் படங்கள் மீது ஆர்வம் அதிகம். அஜித், விஜய், சூரியா ஆகியவர்களின் படங்களை பார்த்து வளர்ந்தேன். அந்த ஆர்வத்தில்தான் நடிக்க வந்தேன், மெய் கதை சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை கொண்ட படம்.எனவே தான் இந்தக்கதையை ஒப்புக்கொண்டேன். ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு திறமையான நடிகை, அவர் இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பது பெருமையாக இருக்கிறது என்றார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், மெய் படம், போலி மருத்துவர், மருத்துவ சிகிச்சை முறைகேடுகளை வெளிப்படுத்தும். சாதாரண காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனைக்கு சென்றால் 1 லட்சம் கேட்கிறார்கள்.அதேநேரத்தில் நல்ல மருத்துவமனைகளும் இருக்கிறது. அதை மையப்படுத்தித்தான் இந்த படம் இயக்கப்பட்டது என்றார்.படத்திற்கு பிரித்வி குமார் இசையனித்துள்ளார்.

Loading...
READ  அடுத்த ஆண்டு முதல் இந்தியர்களுக்கு, ஆன்-அரைவல் -விசா வழங்கும் நாடுகளின் பட்டியல் இதோ...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here