திருவாரூரில் கோவில் சிலைகளை உடைத்தவர்கள் சிக்கினர் ! சிறுவர்களுக்கு மதுவாங்கி கொடுத்து உடைக்க செய்த மதவெறியன்..

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

பிற மதத்தினர் சொல்லி தான் கோவில் சிலைகளை உடைத்தோம் கைதான சிறுவர்கள் பகீர் வாக்குமூலம்

திருவாரூர் அடுத்த தொழுவனங்குடி கிராமத்தை சேர்ந்த 5 சிறுவர்கள் சேர்ந்து அங்குள்ள பெரியநாயகி அம்மன் கோவிலுக்குள் நுழைந்து,

30 மேற்பட்ட சாமி சிலைகளை உடைத்துள்ளனர் , அந்த கோவில் கும்பாபிஷேகம் செய்ய பொதுமக்கள் முடிவு செய்ததால் கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது.

அதனால் கோவிலின் சுற்று சுவர் முழுதாக கட்டிமுடிக்கப்படவில்லை அதை சாதகமாக பயன்படுத்தி உள்ளே நுழைந்த அவர்கள் பெரியநாயகி அம்மன் சிலை , முருகர் சிலை , கோபுரத்தில் வைக்கப்படும் 30 மேற்பட்ட சிலைகள்,

Loading...
READ  இந்துமதம் குறித்த சர்ச்சை பேச்சு நடிகர் சூர்யாவிற்கு வானதி ஸ்ரீனிவாசன் பதிலடி.

என பல சிலைகளை அடித்து நொறுக்கி சேதம் செய்துள்ளனர் அடுத்த நாள் காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் சாமி சிலைகள் சேதமடைந்திருப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த போலீசார் பலரிடம் விசாரணை நடத்தியபின்பு அங்குள்ள CCTV கேமரா காட்சிகள் மற்றும் சுற்றுவட்டத்தில் உள்ள கேமரா காட்சிகளையும் ஆராய்ந்தனர்

அதில் இந்த சிறுவர்கள் தான் இதை செய்தது என்பதை உறுதிப்படுத்திய போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.

அப்போது அந்த சிறுவர்களிடம் என் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதுக்கு எங்களுக்கு மது வாங்க பணம் இல்லை , அப்போது மாற்று மதத்தினர் ஒருவர் வந்து இப்படி இரவில் கோவிலுக்குள் சென்று சிலைகளை உடைத்தால் பணம் தருவதாக கூறியதாகவும்,

READ  இனி பெண்கள், குழந்தைகளை கற்பழிப்பவர்களுக்கு மரண தண்டனை சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறை சட்டத்தை நிறைவேற்றியது மத்திய அரசு

அதனால் தான் நாங்கள் சென்று உடைத்தோம் என்றும் அந்த சிறுவர்கள் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது இருந்தும் இதை ஆதாரத்துடன் நிரூபிக்கும் வரை அந்த சிறுவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்.

இதுகுறித்த செய்திகள் வட இந்திய ஊடகங்களில் வெளியான நிலையில் இதுவரை தமிழக ஊடகங்கள் இந்த செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்து வருகின்றனர்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here