கைதாகும் பிக்பாஸ் மீரா மிதுன்…கொலைமிரட்டல் விட்டதால் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

8 தோட்டாக்கள், நடிகர் சூர்யா நடித்த ” தானா சேர்ந்த கூட்டம் ” ஆகிய படங்களில் நடித்தவர் மீரா மிதுன். இதன் பிறகு பிக்பாஸ் மூலமாக மிகவும் பிரபலமானார். இவருக்கு முகநூல் வாயிலாக தொழிலதிபர் ஜோமைக்கேலுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர், திடீரென்று இருவருக்கும் இடையே பணப் பிரச்சனையால் கடந்த சில மாதங்களாக பிரச்சனை வெடித்தது. மாறி மாறி போலீசில் புகார் அளித்து வந்தனர்.

மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே, ஜோமைக்கெல் அளித்த புகாரினால், போலிசார் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று மீராவிடம் விசாரனை நடத்தினார்கள்.அதன் காரணமாக மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் ஜோமைக்கெலுக்கு மீரா மிதுன் கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதன் காரணமாக ஜோமைக்கெல் எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

READ  ரோசம் வந்துவிட்டதாக தமிழர்களுக்கு? அறந்தாங்கி நிஷாவின் நிகழ்ச்சியை கேன்சல் செய்த ஊர் பஞ்சாயத்து ! ஊருக்குள் அனுமதிப்பது இல்லை என்றும் முடிவு.

இதனால் போலிசார் மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளனர். அதன் பிறகுதான் விசாரணையின் முடிவில் மீரா மிதுன் கைது செய்யப்படுவாரா என்பது பற்றி தெரிய வரும்.நடிகை மீரா மிதுன் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். 2016 ஆம் ஆண்டு மீரா மிதுன் மிஸ் சவுத் இந்தியா பட்டம் வாங்கினார், முறைகேடு செய்து அந்த பட்டம் பெற்றதால், அந்த பட்டமும் பறிக்கப்பட்டது. மேலும் அழகி போட்டியில் வெற்றி பெற செய்வதாக கூறி, நிறைய பெண்களிடம் பண மோசடி செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here