உதவுவோம் என்று மற்ற கட்சிகள் வாயில் சொன்னார்களே தவிர மோடி செய்து காட்டி விட்டார் ! கொண்டாடும் இலங்கை தமிழர்கள்

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

தமிழர்களுக்கு உதவுவோம் என்று மற்ற கட்சிகள் வாயில் சொன்னார்களே தவிர மோடி செய்து காட்டி விட்டார் ! இலங்கை தமிழர்களிடம் வீட்டினை ஒப்படைத்தது மோடி அரசு

கொழும்பு.,

இந்தியாவை தாண்டி மோடிக்கு தனி செல்வாக்கு தற்போது இலங்கை தமிழர்கள் மத்தியில் உருவாகியிருக்கிறது அதற்கு காரணம் மோடி அளித்த வாக்குறுதிகளை இலங்கை மக்களுக்கு நிறைவேற்றியுள்ளார் குறிப்பாக திமுக உள்ளிட்ட கட்சிகளை இலங்கை மக்கள் வெளுத்து வாங்கி இருக்கின்றனர்.

இந்திய அரசாங்கம் சார்பில் இலங்கை உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இலங்கை அரசுடன் இணைந்து தரமான முறையில் வீடுகள் கட்டி தரப்படும் என்று உறுதி அளித்தது.

Loading...
READ  இனி தனிக்கொடி ரத்து உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரில் நடக்கப்போகும் 6 முக்கிய மாற்றங்கள் இதுதான் ! கொண்டாட்டத்தில் இறங்கிய இந்தியர்கள் !

அத்துடன் கடந்த ஆட்சியின் போது இலங்கை சென்றிருந்த மோடி மலைவாழ் தமிழர்கள் மத்தியில் உரை ஆற்றினார் அப்போது விரைவில் இந்தியா சார்பில் வீடுகள் இலங்கை அரசுடன் இணைந்து செய்து தரப்படும் என்று உறுதி அளித்தார்.

அதன்படி தற்போது 2400 வீடுகள் (1200 Million (USD 17.5 Million ) ) செலவில் இலங்கை மக்களுக்கு கட்டி தரப்பட்டு தற்போது தமிழர் கலாச்சார முறை படி குடியேறுதல் நடைபெற்றுள்ளது, இந்தத்தகவலை இலங்கை வெளியுறவு துறை அமைச்சகமும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் உறுதி படுத்தியுள்ளன.

வீட்டினை பெற்ற தமிழர்கள் தங்கள் மகிழ்ச்சியை மோடிக்கு நன்றியாக தெரிவித்துள்ளனர். இதுவரை இலங்கை தமிழர்களுக்கு உதவுவதாக சொன்ன கட்சிகள் அனைத்தும் எங்கள் பெயரை சொல்லி அவர்கள் கட்சியையும், வாக்கு வங்கி அரசியலையும் தமிழகத்தில் வளர்த்து கொண்டார்கள் ஆனால் முதல் முறையாக பாஜக அரசு எங்களுக்கு வீடுகள் கட்டி கொடுத்து எங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளது என்றும் பெருமிதம் கொள்கின்றனர்.

READ  வரும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து களமிறங்குகிறது பாஜக ஹச் ராஜா பரபரப்பு பேட்டி !

இதன்மூலம் இலங்கை தமிழர்கள் மத்தியில் மோடியின் செல்வாக்கு அதிகரித்திருப்பது கணிசமாக தெரிகிறது. இதுவரை இந்த செய்தியினை தமிழக ஊடகங்களும் பத்திரிகைகளும் வெளியிடாமல் இருட்டடிப்பு செய்துவருவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மோடி தமிழர்களை வஞ்சிப்பதாக திமுக உள்ளிட்ட இயக்கங்கள் மக்கள் இடையே பிரச்சாரம் செய்துவரும் நிலையில் மோடியோ சத்தமில்லாமல் தமிழர்களுக்கு தேவையான செய்துவருவதாக தெரிகிறது.

©TNNEWS24


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here