இனி பெட்ரோல் டீசல் விலையை இந்தியாவே நிர்ணயிக்கும் ! ரஷ்யா மூலம் அமெரிக்காவிற்கு செக் வைத்த மோடி

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

இனி பெட்ரோல் டீசல் விலையை இந்தியாவே நிர்ணயிக்கும் ! ரஷ்யா மூலம் அமெரிக்காவிற்கு செக் வைத்த மோடி

ரஷியா :

இந்திய பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் பல்வேறு சிறப்புமிக்க ஒப்பந்தங்களை நிறைவேற்றி இருக்கிறது, குறிப்பாக பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவரும் வேலையில் மோடியின் அதிரடியான வியூகம் எந்த அளவில் உலக நாடுகள் இடையே தாக்கத்தை ஏற்படுத்த இருக்கிறது என்று விஜயகுமார் அருணகிரி எளிதில் விளக்கியுள்ளார்.

அவர் தெரிவித்த தகவல்கள் பின்வருமாறு :-

Loading...

இந்தியா ரஷ்யா உறவு இனி ஏறுமுகமே-

இந்தியா ரஷ்யா இடையே ரஷ்யாவின்
கிழக்கு துருவமான விளாடி வோஸ்டோக் நகருக்கும் நம்முடைய சென்னைக்கும் இடையில் உருவாக இருக்கும் புதிய கடல்
வழிப்பாதையினால் இந்தியாவுக்கு என்ன
விதமான பலன்கள் கிடைக்கும் என்றால்
ஆரம்பத்திலேயே இந்தியா ரஷ்யாவிடம்
இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண் ணெ
யின் அளவு பெரியளவில் அதிகரிக்கும்.

இதுவரை இந்தியா ரஷ்யா விடம் இருந்து
ஆயுதங்களை தவிர வேறு எதையும் பெரிய
அளவில் இறக்குமதி செய்யவில்லை. ஆனால்
இனி ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இந்தியா
வில் அதிகளவில் இறக்குமதி யாகும். இதற்கு
உதாரணமாக நாடெங்கும் இப்பொழுது உரு
வாகி வரும் எஸ்ஸார் பெட்ரோல் பங்குகளை யே கூறலாம்.

தன்னுடைய ஒவ்வொரு செயலையும் மோடி
எவ்வளவு சிறப்பாக திட்டமிடுகிறார் என்பத ற்கு இந்த எஸ்ஸார் பெட்ரோல் நிறுவன பங்
குகளையும் இந்த சென்னை விளாடிவோ ஸ்டோக் கடல் வழிப்பாதையையும் வைத்தே
அறிந்து கொள்ளலாம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மோடிக்கும் க்கும் ரஷ்ய அதிபர் புதினுக்கும் இடையில்
மிகப்பெரிய ஒரு ஒப்பந்தம் கையெழுத்தான து.அது என்ன தெரியுமா?

சுமார் 75 ஆயிரம் கோடி கடனில் தள்ளாடி வ ந்த இந்தியாவின் தனியார் எண்ணெய் நிறு னமான எஸ்ஸார்நிறுவனத்தை ரஷ்யாவின் அரசு எண்ணெய்நிறுவனமான ரோஸ் நெப்ட் க்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் வாங்கிக் கொ ண்டு மோடி விற்று விட்டார்.

இதனால் எஸ்ஸார் நிறுவனம் வங்கிகளிடம்
வாங்கிய கடனும் பைசலானது.கூடவே ரஷ்யா
வில் இருந்து கச்சா எண்ணெய் இந்தியாவு
க்கு வர ஆரம்பித்தது.இந்த எஸ்ஸார் நிறுவன
த்தின் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தான் ரஷ்யா வின் கச்சா எண்ணெய் சுத்திக ரிப்பு செய்யப்பட்டு எஸ்ஸார் பெட்ரோல் பங்கு
களின் மூலமாக இந்தியா முழுவதும் விற்ப னை ஆகி வருகிறது.

READ  பிரதமர் மோடியை வரவேற்க ஜப்பானில் விண்ணை பிளந்த ஜெய் ஸ்ரீ ராம் கோசம்

இப்பொழுது ஊரெல்லாம் முளைத்து வரும்
எஸ்ஸார் பெ்ரோல் பங்குகள் அனைத்தும்
ரஷ்யாவின் அரசு பெட்ரோல் நிறுவனமான
ரோஸ்நெப்ட்டின் கட்டுப்பாட்டில் இயங்கும்
பங்குகளே..உடனே உங்களுக்கு ஒரு கேள்வி
வரலாம்..

ஏன் ரஷ்யாவின் கச்சா எண்ணெயை இந்திய அரசு பெட்ரோல் நிறுனங்களானபாரத் பெட் ரோலியம் இந்தியன் ஆயில் மற்றும் ஹிந்து ஸ்தான் பெட்ரோலிய நிறுனங்களில்அளிக்கா மல் எஸ்ஸார் பெட்ரோலிய நிறுவனம் மட்டும் பயன்படுத்துகிறதே என்று கேள்வி வரலாம்.

நாம் அரபு நாடுகளில் வாங்கும் கச்சா எண் ணெயை விட ரஷ்யாவில் கிடைக்கும் கச்சா
எண்ணெய் அடர்த்தி அதிகமானது.அதனால்
நம்முடைய அரசு பெட்ரோல் நிறுவனங்கள்
அதனை சுத்திகரிப்பு செய்ய முடியாது.அத
னால் தான் இப்பொழுது எஸ்ஸார் பெட்ரோல்
நிறுவனங்களில் மட்டும் ரஷ்யாவின் கச்சா
எண்ணெயிலிருத்து பெட்ரோல் டீசல் உருவா க்கப்பட்டு வருகிறது.

இப்பொழுது ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்
ஸ்பெர்க் நகரில் இருந்து இந்தியாவின் மும்பை துறைமுகத்திற்கு ரஷ்யாவின் கச்சா
எண்ணெய் வந்து சேர குறைந்தது 40 நாட் களாகிறது.இந்த கால தாமதமும் இனி ரஷ்யா
வின் விளாடி வோஸ்டோக் நகரில் இருந்து
சென்னைக்கு வர ஆரம்பிக்கும் பொழுது 20 களாக பாதி அளவில் குறைந்து விடும்.

அப்புறம் இந்தியா அதிகளவில் ரஷ்யா விடம்
இருந்து தான் கச்சா எண்ணெயை இறக்கு மதி செய்ய ஆரம்பிக்கும். இதற்கு பிறகு இந்திய பிறகு இந்திய அரசு நிறுவனங்களும்
ரஷ்யாவின் கச்சா எண்ணெயை சுத்திகரிப்பு
செய்ய ஆரம்பிக்கும் வசதிகளை ஆரம்பித்து
மக்களுக்கு வழங்க ஆரம்பிக்கும்.

இதன் மூலம் அமெரிக்காவின் பிடியில் இரு க்கும் ஓபெக் நாடுகளின் மூலமாக இந்தியா
சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை
ஏற்றங்களுக்கு முற்று புள்ளி விழுந்து எதிர்
காலத்தில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுக்குள் வைத்து விட முடியும் என்பது மோடியோட நம்பிக்கை.

அதோடு ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில்
இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி
செய்யும் பொழுது அது முழு அளவில் இந்தி யாவின் ரூபாய் மூலமாக நடைபெறும் என் ப
தால் இந்தியாவின் ரூபாய் மதிப்பு உலகளவி ல் உயர ஆரம்பிக்கும்.

இந்தியாவின் எரிபொருள் தேவை தினசரி 42 லட்சம் பேரல்களாக உள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்து எரி பொருள் தேவையில் இந்தியா மூன்றாவது நாடாக உள்ளது . நம் நாட்டில் பெட் ரோல்,டீசல் பயன் பாட்டிற்கு 80% அளவுக்கு கச்சா எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய ப் பட்டுவருகிறது.

READ  பொதுக்கூட்டத்தில் ரஜினியின் பஞ்ச் டயலாக் பேசி அதிரடி காட்டிய மோடி ! சீமானுக்கு வாய்ப்பு கிடைத்தது !

சவூதிஅரேபியா, ஈராக்,வெனின்சுலா, குவை த், நைஜீரியா, கத்தார்,ஐக்கிய அரபு எமிரே ட்ஸ்,ஈரான் போன்ற நாடுகளில் இருந்து இற க்குமதி செய்யப்படுகிறது.இதற்கு நாம் வரு டத்திற்கு சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் பண த்தினை இதற்காக அமெரிக்க டாலராக மா ற்றி சம்பந்தபட்ட நாடுகளுக்குபட்டுவாடா செ ய்து வருறோம்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை
உயர்வதற்க்கும் இறங்குவதற்கும் முக்கிய
காரணம் அமெரிக்கா தான்.ரஷ்யாவை மிரட்ட அதன் பொருளாதாரத்தை காலி செய்ய நினைக்கும் அமெரிக்கா ஓபெக் நாடுகளை முன் வைத்து ஆட்டம் ஆடிக்கொண்டு இரு க்கிறது.இதற்கு இந்தியா மாதிரியான வள ரும் நாடுகள் பலியாகிக்கொண்டு இருக்கி
ன்றன.

சரிப்பா..ரஷ்யாவுக்கும் அமெரிக்காவிற்கும் உள்ள பிரச்சனைக்கும் பெட்ரோல் டீசல் விலை உய்ர்விற் கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம்.உலகிலேயேஅதிக கச்சா எண்ணையை உற்பத்தி செய்யும் முதல் நாடு
சவூதி அரேபியா அதற்கு அடுத்து ரஷ்யா தான்.

உலகிலேயேஅதிக அளவில் எரிபொருள் பய ன்படுத்தும்நாடு அமெரிக்காதான்.அடுத்து சீ னா மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.
கச்சாஎண்ணை உற்பத்தியில் உலகில் நம்ப ர்-1 நாடாக இருக்கும் சவூதி அரேபியா ஒரு அமெரிக்காவின் அடிமை நாடு. இந்த நாட்டின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவே பொறுப்பே ற்றுள்ளது.இன்றைய தேதியில் இந்தியா சவூ தி அரேபியாவிட ம் இருந்து தான் குரூட் ஆயி லை இறக்குமதி செய்து பதிலுக்கு அமெரிக்க டாலராக கொடுத்துக் கொண்டு இருக்கிறது..

2015 ம் ஆண்டில் 100 டாலரருக்கு மேல் விற்ற ஒரு பேரல் கச்சா எண்ணை 30 டாலருக்கு எப்படி வந்தது என்றால் உக்ரைனிலன் கிரிமி யாவை அபகரித்துக்கொண்ட ரஷ்யாவை பொருளாதார ரீதியில் வீழ்த்த ஒபாமா விளை யாடிய சகுனி ஆட்டத்தினால் தான் உலகள வில் கச்சா எண்ணை விலை குறைந்தது


சவூதி அரேபியாவிற்கு அடுத்து உலகில் அதி க அளவில் கச்சா எண்ணையை விற்கும் நாடு ரஷ்யா தான் ஆனால் விலை பேரல் ஒன்று க்கு 100 டாலர்.இதற்கு குறைந்து விற்றால்
ரஷியாவில் கட்டுபடியாகாது.இதனால் சவூதி
அரேபியாவை கச்சா எண்ணையை அதிகள வில் உற்பத்தி செய்ய வைத்தது அமெரிக்கா.


ஒபெக் நாடுகள் செய்த அதிக உற்பத்தியால் விலை குறைந்து ரஷ்யாவின் கஸ்டமர்கள் இடம் மாற ஆரம்பித்தார்கள். இதனால் ரஷ் யாவின் பொருளாதாரம் டான்ஸ் ஆட ஆரம்பி த்ததுகூடவே சவூதி அரேபியாவிலும் பொரு ளாதாரம் இறங்க ஆரம்பித்தது.

READ  டாக்டர் குழந்தையை கடத்திய முகமது ஷேக் இரண்டு நாட்களுக்கு முன்னர் புதிய கல்வி கொள்கை குழந்தைகளின் வாழ்க்கையை பாதிப்பதாக சூர்யாவிற்கு ஆதரவாக போராடியவர்

பின்னே இருக்காதா,,நூறு ரூபாய்க்கு ஒரு
பொருளை விற்ற இடத்தில் 30 ரூபாய்க்கு விற்றால் என்ன என்ன லாபம் கிடைக்கும் நீங்களே சொல்லுங்கள்..அதனால் மீண்டும் சவூதி அரேபியா கச்சா எண்ணை உற்பத்தி யை மேலும் குறைக்க இதனால் சர்வதேச அளவில் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர ஆரம்பித்து.

இப்படி கச்சா எண்ணெய் அரசியலை வைத்து ரஷ்யா வுடன் விளையாடி வரும் அமெரிக்காவு க்கு அதே கச்சா எண்ணெய் அரசியலை முன் வைத்து விளையாட ஆரம்பித்த மோடி அதே ரஷ்யாவின் அரசு ஆயில் நிறுவனமான ரோ ஸ் நெப்ட்க்கு இந்தியாவின் தனியார் நிறுவ னமான எஸ்ஸார் ஆயில் நிறுவனத்தை விற்க
வைத்து ரஷ்யாவின் கச்சா எண்ணெயை
இந்தியாவில் இறங்க வைத்தார்.

அடுத்து இந்தியா ரஷ்யா இடையே புதியதாக
உருவாகும் விளாடிவோஸ்டோக்- சென்னை
கடல்வழிப் பாதையினால் ரஷ்யாவில் இரு ந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெய்
அளவு அதிகமாகும் என்பதால் இந்தியாவில்
எண்ணெய் விலை நிலையாக இருக்கும். அ
தோடு இந்திய ரூபாயின் மதிப்பு சர்வதேச
அளவில் அதிகரிக்கும்.

அதுமட்டுமின்றி இந்தியா ரஷ்யாவின் டாப்-1
இறக்குமதியாளராக மாறும் பொழுது இந்தி
யாவை சுற்றியுள்ள குட்டி நாடுகள் எல்லாம்
இந்தியாவிடம் இருந்தே ரஷ்யாவின் பெட்ரோ ல் டீசல்களை வாங்க ஆரம்பிப்பார்கள். இத
னால் இந்தியாவின் பெட்ரோல் டீசல் ஏற்றும தி அதிகமாகி ஒரு காலத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து கச்சா எண்ணெய் விலையை சர்வதேச மார்க்கெட்டில் நிர்ணயம்
செய்யும் நாடுகளாக மாற முடியும்.
……

ரூபே கார்டுகளை இந்தியாவில் மட்டுமல்லாமல் துபாய் போன்ற வெளிநாடுகளில் அறிமுக படுத்தி அமெரிக்காவின் மாஸ்டர் கார்டு மற்றும் விசா ஆகியவற்றிற்கு செக் வைத்தது போன்று தற்போது உலகின் இரண்டாவது மிக பெரிய எரிபொருள் உற்பத்தியாளரானா ரசியாவிடம் ஒப்பந்தம் செய்து கச்சா எண்ணெய் விலை உயர்வை வைத்து மிரட்டி வந்த அமெரிக்காவிற்கு தனக்கே உள்ள பாணியில் இந்தியா ஆப்பு வைத்துவிட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here