அமெரிக்க தடையாவது மண்ணாவது சொல்லில் மட்டுமல்ல செயலிலும் காட்டினார் மோடி ! உலக வல்லரசாக உருமாறும் இந்தியா

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

டெல்லி.,

மத்தியில் பாஜக அரசு மீண்டும் பொறுப்பேற்றது முதல் மோடியின் அடுத்த அதிரடி இந்திய ரூபாய் மதிப்பில் பரிமாற்றம் செய்யவேண்டும் என்பதில் இருந்து வந்ததாக பொருளாதார நிபுணர்கள் கூறிவந்தனர்.

குறிப்பாக இந்தியாவிற்கு தொடர்ந்து அமெரிக்கா பல்வேறு வழிகளில் முட்டுக்கட்டை போட்டு வந்தது, ஈரான் இந்தியா ரூபாய் மதிப்பிலேயே நமக்கு பெட்ரோல் வழங்குவதாக கூறியது, மேலும் அந்த பணத்தை கொண்டு இந்தியாவில் பொருள்களை வாங்குவதாக அறிவித்தது. இதனால் நமக்கு பொருளாதாரம் வலுப்படுவது மட்டுமல்லாமல் அமெரிக்க டாலர் பரிமாற்றத்திற்கு ஆகும் செலவும் குறையும்.

Loading...

இதனை இந்தியா முன்னெடுத்த போது அமெரிக்கா இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரித்தது, மேலும் இந்தியா ரஷிய நாட்டின் இராணுவ தயாரிப்பான S 400 இராணுவ பயன்பாட்டிற்கு வாங்கினால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என மிரட்டும் தொனியில் கூறியது.

READ  உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார் தெரியுமா..? அதில் ஒரு இந்தியரும் இடம்பிடித்திருக்கிறார்

ஆனால் இவை அனைத்திற்கும் இந்திய பிரதமர் மோடி ஒரே அடியில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். குறிப்பாக இந்தியா மற்றும் ரஷியா நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் அமெரிக்காவின் கனவில் மண்ணள்ளி போட்டுள்ளது.

இனி இந்தியா மற்றும் ரஷியா ஆகிய நாடுகள் தங்கள் நாட்டு பணத்தில் பொருள்களை வாங்கி கொள்வது என தீர்மானித்துள்ளன. இதன்மூலம் அமெரிக்க நாட்டு பணமான டாலர் பயன்பாட்டினை தவிர்ப்பதுடன் நாளை அமெரிக்கா பொருளாதார தடை விதித்தாலும் அது இந்தியாவை பொருளாதார ரீதியில் பெரிய அளவில் பாதிக்காது.

இந்த முயற்சியை இதற்கு முன்னர் ராஜிவ் காந்தி முன்னெடுத்தார் அப்போது ராஜிவ் காந்தி உலக நாடுகளுடன் வலுவான உறவை கொண்டிராததால் இது வெற்றியடையவில்லை தற்போது இந்தியாவில் வலுவான தலைவராக மோடி நிகழ்வதும், இந்திய அரசு வெளியுறவுத்துறை மூலம் உலக நாடுகள் மத்தியில் வலுவான உறவை கொண்டிருப்பதால் இது சாத்தியமானதாக பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

READ  பிரமாண்டமாக தயாராகியுள்ள காடுவெட்டி குரு மண்டபம் ! மணி மண்டபத்தில் என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா?

இனி இந்தியா உலக நாடுகள் சந்தையில் தனது வலுவான தடத்தினை பதிக்கும் என்றும் வல்லரசாக இந்தியா உருமாற இதுவாய்ப்பினை ஏற்படுத்தித்தரும் என்றும் கூறுகின்றனர். மோடி இந்தியா ரூபாயின் மதிப்பு உலகநாடுகள் மத்தியில் உயரும் என்று வாக்குறுதி அளித்தார் அதனை தற்போது செயலிலும் செய்து காட்டியிருக்கிறார்.

இதற்கு முன்னர் வங்கி atm, credit card கார்டுகளில் ஆதிக்கம் செலுத்திய அமெரிக்காவின் மாஸ்டர் கார்டினை இந்தியாவின் ரூபாய் கார்டுகள் பின்னுக்கு தள்ளியது ( இந்தியாவில் ) குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உங்களது வாட்சாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here