ரூ.10-க்கு ESI மருத்துவமனையில் எல்லோருக்கும் சிகிச்சை.. மோடி அரசின் அதிரடி அறிவிப்பு

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

ஏழை மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்த காப்பீடு இல்லாதவர்களுக்கும் ESI மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கும் அதிரடி திட்டத்தினை மத்திய அரசு கடந்த ஆட்சியில் தீட்டியது.

ESI மருத்துவமனையில் காப்பீடு இல்லாத ஏழை மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம் குறித்து கடந்த ஆண்டு 2018 -ல் நடந்த ESI காப்ரேஷனின் 176-வது கூட்டத்தில் அப்போதைய மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வர் முடிவெடுத்தார்.

இந்தக் கூட்டத்தில் காப்பீடு இல்லாதவர்களும் வெளிநோயாளிகள் மருத்துவ ஆலோசனையை வெறும் 10 ரூபாய்க்கும், 25 சதவீத கட்டணத்தினை செலுத்தி மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தின் கீழ் வரும் குறிப்பிட்ட சில சிகிச்சைகளையும், ஒரு வருடத்திற்கு குறைந்த விலையில் மருந்துகளை வாங்கிய விலைக்கே அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

READ  இப்போ என்ன நீங்க செத்துடீங்களா பா ரஞ்சித்தை கிழித்தெடுத்த காயத்ரி ரகுராம் பதுங்கிய ரஞ்சித் !

தொழிலாளர் துறை அமைச்சகத்தின் இந்தத் திட்டத்தினால் ஏழை மக்கள் தரமான மருத்துவ சிகிச்சையைப் பெறுவார்கள் என்று அறிக்கையும் வெளியிடப்பட்டது.

Loading...

ESI மருத்துவமனைகளில் மருத்துவர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதால் விரைவில் 5,200 நபர்களை பணிக்கு எடுக்கவும் முடிவு செய்து இதற்கான பணிகளும் நடைபெற்று வருவதாக கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி தற்போது மீண்டும் பாஜக அரசு பொறுப்பேற்று இருப்பதால் தான் முன்பே அளித்த 10 ரூபாய்க்கான ESI சிகிச்சையை நிறைவேற்ற இருக்கிறது. தற்போது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தேவையான அளவு மத்திய அரசு பணியமர்த்தியுள்ளது.

அதன் படி வருகின்ற ஆகஸ்ட் மாதம் இறுதியில் நாடு முழுவதும் இத்திட்டம் செயலுக்கு வரும் என்று தெரிவருகிறது.

READ  #BIGBREAKINGNEWS சிலை கடத்தல் வழக்கில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு பொன்மாணிக்கவேல். யார் அந்த இரண்டு அமைச்சர்கள்?

இத்திட்டத்தின் மூலம் ஏழை மக்கள் அதிகம் பயன் அடைவார்கள் குறிப்பாக தென் மாநிலங்களை சேர்ந்த மக்கள் அதிகம் பயன்பெறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here