தன் ஆசையை நிறைவேற்றுவதற்காக சொந்த மகளை விற்ற தாய்

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

நீண்ட நாள் கனவுக் காரை வாங்க சொந்த மகளை விற்றுள்ளார். இச்சம்பவம் அங்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில், ஜோர்ஜியா என்ற நகரில், 47 வயதுடைய அலிஸ் லீன் என்பவர்க்கு இரண்டு வயதுடைய ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த அலிஸ் லீன்க்கு நீண்ட நாள்களாக சொந்த கார் வாங்கி அதில் பயணம் செய்ய நீண்ட நாள்களாக ஆசை. அந்த நேரத்தில் தீனா மற்றும் விசோனியா என்கிற தம்பதி அறிமுகம் கிடைக்கிறது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. ஆனால், வசதியானவர்கள்.

கார் வாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தன்னுடைய இரண்டு வயதுடைய சொந்த மகளை தீனா,விசோனியா தம்பதிக்கு கொடுத்து, அதற்கு பதிலாக “Plymouth Laser 1992” என்கிற விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கி மாற்றிக்கொண்டனர்.

READ  ஏன் அமெரிக்க பயணம் மோடி தகவல்

சில ஆண்டுகள் கடந்தன, பின்பு அந்த சிறுமிக்கு தீவிர ஒவ்வாமை நோய் ஏற்பட்டது. ‘ஹைய் பொய்ன்ட் வேக் போரஸ்ட் பேப்டிஸ்ட்’ என்கிற மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதும். அந்த சிறுமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது, அந்த சிறுமிக்கு உடலில் அடிப்பட்ட தழும்புகள் பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.பின்பு அங்குள்ள மருத்துவ ஊழியர் சிறார் காப்பக மையத்திற்கு புகார் அளித்தனர்.

Loading...

அதன் பின்பு, விசாரணை செய்த போது, அந்த சிறுமியின் சொந்த தாய் எனக் கூறிய விசோனியா தம்பதி. சரியான ஆவணங்கள் சமர்பிக்க முடியாமல் பின்னர், நாங்கள் வளர்ப்புத் தாய் என்று வாக்குமூலம் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, அலிஸ் லீன், தீனா மற்றும் விசோனியா தம்பதியர் ஆகியோர் மீது சட்டவிரோதமான முறையில் சிறார் விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்கு கைது செய்து அபராதமும் விதித்தனர். தற்போது, அந்த சிறுமி குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பில் இருந்து வருகிறார்

READ  அடடா இப்படி ஒரு கேட்சை நீங்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் பார்க்க முடியுமா? நம்மூர் இளைஞர்கரின் கேட்சை புகழும் இங்கிலாந்து ! வீடியோ !

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here