இலங்கையில் இஸ்லாமியர்களின் பதவிகள் பறிப்பு , தேர்தலில் போட்டியிட தடை ?

0
இது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

இலங்கையில் ஈஸ்டர் திருநாளின்போது பல இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது அதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற இஸ்லாமிய அமைப்பு காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது.

அதை தொடர்ந்து இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிய தடை போன்ற பல தடைகள் விதிக்கப்பட்டது , இந்த தாக்குதலை தொடர்ந்து கொதித்தெழுந்த பொதுமக்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த குண்டு வெடிப்பிற்கு அரசாங்கத்தில் உள்ள பல முஸ்லீம் அமைச்சர்களும் உடந்தை என்பதால்
அரசில் உள்ள 9 முஸ்லீம் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று கண்டியில் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அந்த 9 அமைச்சர்களையும் பதவியிலிருந்து நீக்கி இலங்கை அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

READ  #BREAKING புதிய தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு வெளியாகிறது !

மேலும் இனி வரும் தேர்தல்களிலும் இஸ்லாமியர்கள் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்துள்ளதால்,

அந்த கோரிக்கையையும் பரிசீலிப்பதாகவும் நிச்சயம் அவர்களின் கோரிக்கையை இலங்கை அரசு நிறைவேற்றும் என்றும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் இலங்கை அதிபர் சிறிசேனா வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த, இந்து, கிறிஸ்தவ அமைப்புகள் கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்றும் அதுவரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளதால் இலங்கையில் பதற்றம் நீடிக்கிறது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here