பெரியார் வழியை பின்பற்றுபவர் பிரதமர் நரேந்திர மோடி…கீ.வீரமணி புகழாரம்

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

நாட்டின் 73 வைத்து சுதந்திர தினத்தை கொண்டாடி, பின்பு கொடியேற்றிவிட்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது பற்றி பேசினார். இதை கவனித்த திராவிட கழகத்தின் தலைவர் கீ.வீரமணி, பிரதமர் மோடியின் இத்தகைய பேச்சு பெரியார் வழியில் நடப்பவர்கள் பேசும் பேச்சு என்று கூறி பிரதமரை புகழ்ந்துள்ளார்.

திக தலைவர் வீரமணி நேற்று அளித்த அறிக்கையில் கூறியிருந்ததாவது, இந்திய நாட்டோட வளர்ச்சி எல்லா துறைகளிலும் இருக்கிறது என்பதை நடைமுறையில் கொண்டுவந்து செயல் படுத்த எடுக்கப்படும் எந்த முயற்சிக்கும், முன்னோடியான திட்டம் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதே என்று தெரிவித்தார்.பெரியார், சமூக வளர்ச்சி,முன்னேற்றம் , பெண்களுக்கான சம உரிமை, சம வாய்ப்பு கண்ணோட்டத்திலேயே இந்த மக்கள் தொகை கட்டுப்பாட்டின் அவசியம் குறித்து 80 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டார்.

READ  "ஆப்பரேஷன் நக்ஸலைட்ஸ்" அமித்ஷாவின் அடுத்த அதிரடி

பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையில், மக்கள் தொகை கட்டுப்பாட்டை பற்றி பேசியிருப்பது வரவேற்கவேண்டிய விஷயம் என்று வீரமணி கூறியுள்ளார். இதனால் பிரதமர் மோடி பெரியார் வழியில் நடக்கிறார், ஏனென்றால் காலத்தின் கட்டாயம் அது, என்று வீரமணி புகழாரம் சூட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here