அரசியலில் குதித்தார் நீயா நானா கோபி நாத் யாரை தாக்கி பேசவேண்டும் திட்டம் ரெடி?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சென்னை.,

பிரபல தனியார் பொழுதுபோக்கு தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கோபிநாத். இவர் தற்போது பள்ளி, கல்லூரிகள் போன்ற பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மாணவர்கள் இடையே அவர்களின் எதிர்காலம் குறித்து பேசிவருகிறார்.

கோபிநாத் திராவிடத்தை தூக்கிப்பிடிப்பது மட்டுமல்லாமல் தொடர்ந்து ஒரு கட்சியிடம் நிதிவாங்கி கொண்டு மத்திய அரசிற்கும் அதன் திட்டங்களையும் எதிர்த்து பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக எதிர்வினையை தூண்டிவிடுவதாக பலரும் குற்றம் சுமத்தி வந்தனர்.

இந்நிலையில்தான் தனியார் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட கோபிநாத் இது பெரியார் மண் இது ஒன்றும் வடநாடு இல்லை, நீட் அது இது என்று நீ திணிக்க சமூக நீதியை காத்த பெரியார் வாழ்ந்த மண் உன் திருட்டு தனத்தை வேறு எங்காவது வைத்து கொள் என்று மத்திய அரசின் திட்டங்களையும் பிரதமரையும் மறைமுகமாக விமர்ச்சித்து கல்லூரியில் பேசியுள்ளார்.

READ  பாஜகவினரை தொடர்ந்து பியூஸ் மனுஸை சுளுக்கெடுத்த இளைஞர்கள் ( வீடியோ இணைப்பு. )

கல்லூரியில் மாணவர்களின் எதிர்காலத்தை எவ்வாறு முன்னேற்றுவது, அல்லது படிப்பில் கவனம் செலுத்துவது என்று பேசுவதற்கு பதிலாக அல்லது ஒருவரின் வெற்றியை பேசுவதை விட்டுவிட்டு தொடர்ந்து ஒரு தலை பட்சமாக கோபிநாத் செல்லும் பொது விழாக்களில் குறிப்பிட்ட முறையில் மாணவர்களின் மனதில் மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக போராட தூண்டி வருவதாகவும் அவர் மீது குற்றசாட்டு எழுந்துள்ளது.

மேலும் தமிழகத்தில் மாணவர்கள் மனதில் இப்போதே மத்திய அரசிற்கு எதிராக எதிர்வினைகளை விதைப்பதன் மூலம் வருங்காலத்தில் பாஜகவினை எதிர்த்து போராடும் நோக்கத்தில் கோபிநாத் போன்றோர் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

முக்கிய எதிர்கட்சியிடம் பணத்தை பெற்றுக்கொண்டு மாணவர்களிடம் பாஜகவிற்கு எதிராக மாணவர்களை தயார் படுத்துவதே கோபிநாத்தின் தற்போதைய இலக்காம். பொது பிரச்னையை பேசுவதாக கூறி மாணவர்கள் மத்தியில் பேச தொடங்கிய கோபிநாத் தற்போது அரசியலில் குதித்து பாஜகவிற்கு எதிராக அரசியல் கட்சியின் முகமாக மாறி இருப்பது மட்டுமல்லாமல் யாரை எப்போது தாக்கி பேசவேண்டும் என்ற திட்டமும் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

READ  திமுக தடை செய்ய வேண்டுமா கூடாதா வாக்கெடுப்பு நடத்துகிறது SAFETY INDIA உள்ளே சென்று உங்கள் வாக்கை பதிவு செய்யுங்கள்

கோபிநாத் மற்றும் அவரை பேச விழாவிற்கு அழைக்கும் கல்லூரி நிர்வாகம் ஆகியவற்றின் பின்னணியை மாணவர்கள் ஆராய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

சூர்யா, சமுத்திரகனி, வரிசையில் இந்த மாதம் மாதம் கோபிநாத்தின் உண்மை முகமும் வெளிப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.

இதற்கு முன்னர் ஜல்லிக்கட்டு, நியூட்ரினோ, ஹைடிரோகார்பன் திட்டங்களை அமல்படுத்திய திமுக கூட்டணியை விமர்சனம் செய்யாமல் பாஜகவை எதிர்த்து கோபிநாத் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

இது போன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here