உலகம் முழுவதும் கவனம்பெற்ற நெல்லை சம்பவ கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்தது யார் என்று தெரிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள் !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

நெல்லை மாவட்டம் கடயத்தை அடுத்த கல்யாணிபுரத்தை சேர்ந்த தம்பதியினர் சண்முகவேல் – செந்தாமரை வீட்டிற்குள் கடந்த வாரம் இரவு வீட்டிற்குள் நுழைந்த இரண்டு திருடர்கள் அரிவாளுடன் முதியவர்கள் இருவரையும் தாக்கி கொள்ளை அடிக்க முயன்றனர்.

ஆனால் இருவரும் ஒன்றாக சேர்ந்த கையில் கிடைத்த பிளாஸ்டிக் சேர், செருப்பு, பக்கெட் உள்ளிட்டவைகளை கொண்டு அடித்து கொள்ளையர்களை விரட்டி அடித்தனர், இந்த சிசிடிவி காட்சி வெளியாகி உலகம் முழுவதும் கவனம் பெற்றது, பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் மற்றும் பலரும் சண்முகவேல் செந்தாமரை தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

READ  ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #மூத்திரவாளி ஊர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பெரியாரிஸ்ட்கள் கடும் கவலை !

மேலும் சுதந்திர தினவிழாவில் தமிழக முதல்வர் பழனிசாமி தம்பதியினர் இருவருக்கும் வீர தீர செயலுக்கான விருதினை வழங்கி கவுரவித்தார். இதுவரை அனைவரும் அறிந்ததே ஆனால் காவல்துறையினர் கொள்ளையர்களை அடையாளம் காணுவதற்கு மிகுந்த சிரமம் அடைந்தனர் அனைத்து தரப்பிலும் விசாரித்துக்கூட துப்பு கிடைக்கவில்லை இந்நிலையில்தான் காவல்துறையினருக்கு சண்முகவேல் – செந்தாமரை தம்பதியினரின் இரண்டு மகன்கள் மீது சந்தேக பார்வை விழுந்துள்ளது.

குறிப்பாக சம்பவம் நடந்த அன்று வீட்டில் இருந்த 14 சி சி டி வி கேமெராக்களில் 13 அனைத்து வைக்கப்பட்டுள்ளது முதலில் போலீஸாருக்கு சந்தேகத்தை அதிகப்படுத்தியது, பின்பு வீட்டில் பாதுகாப்பிற்கு உள்ள நாய்களுக்கு மயக்க மருந்து கலந்த உணவை கொடுத்த பின்னரே கொள்ளையர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.

Loading...
READ  அரைநிர்வாணமாக பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட புகை படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி !

அப்போது நாய்கள் அறிமுகமான நபர் உணவு கொடுத்ததால் மட்டுமே குறைவில்லை என்பதும் போலீசார் கவனத்தில் கொண்டனர், மேலும் கையில் அரிவாளுடன் வந்த நபர்கள் கடைசி வரை அரிவாளை கொண்டு தம்பதியினரை தாக்காதது போலீஸாருக்கு மேலும் சந்தேகத்தை அதிக படுத்தியது, கொள்ளை அடிக்கவந்தவன் நிச்சயம் தயவு பார்க்கமாட்டான், கையிலாவது வெட்டி இருப்பான் மேலும் தங்கள் அடையாளம் தெரியக்கூடாது என்பதிலேயே இரண்டு கொள்ளையரும் மிக கவனமாக இருந்தனர்.

இதனால் கொள்ளை அடிக்க வந்தவர்கள் நிச்சயம் தெரிந்தவர்கள் மேலும் அவர்களது நோக்கம் கொள்ளை அடிப்பது அல்ல என்றும் போலீசார் அடையாளம் கண்டுகொண்டனர். இதன்மூலம் முதியவர்கள் இருவரும் சொத்துக்களை யார் பெயருக்கு உயில் எழுதி வைத்திருக்கிறார்கள் என்பதனை அறிய இரண்டு மகனில் ஒருவர்தான் தனக்கு நெருக்கமான நண்பர்களை அனுப்பி வைத்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

READ  சற்றுமுன் : அய்யாக்கண்ணு பாணியில் பியூஷிற்கு அரை ! மூன்று நிமிட முழு வீடியோ வெளியானது

இதன் மூலம் இன்றோ அல்லது நாளையோ மகன்களின் உதவியுடன் கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்து விடுவார்கள் என்று காவல்துறை நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காசுக்கு முன்பு தந்தை தாய் பாசம் இனி செல்லாது போல !

©TNNEWS24


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here