நாளை தமிழகம் வரும் அமிட்ஷா, இந்த மூவரில் ஒருவர்தான் தமிழக பாஜகவின் புதிய தலைவர் ஆகிறார். யார் அந்த ஒருவர்?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

காஞ்சிபுரம்.,

நாளை அத்திவரதரை தரிசிப்பதற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமிட்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் காஞ்சிபுரம் வருகின்றனர். சென்னை வரும் மோடியை ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வரவேற்கின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிஹாப்டர் மூலம் காஞ்சிபுரம் செல்லும் மூவரும் அத்திவரதரை தரிசித்துவிட்டு அங்கிருந்து நேராக சென்னை திரும்புகின்றனர், இதற்கிடையில் நாளை தமிழக பாஜக தலைவர் மாற்றம், அதிமுகவை சேர்ந்த மக்களவை எம் பி ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பது போன்ற முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்கள்.

Loading...
READ  உலகின் வலிமையான தலைவர் மோடி தான் ! இங்கிலாந்தின் ஹெரால்ட் நடத்திய ஆய்வின் முடிவுகள் ! உலக தலைவர்களை பின்னுக்கு தள்ளினார்.

தமிழக பாஜகவின் தற்போதைய தலைவராக இருக்கின்ற தமிழிசையின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது எனவே தமிழக பாஜவிற்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக பாஜகவை பொறுத்தவரை மூத்த தலைவர்களான பொன் ராதாகிருஷ்ணன், சி பி ராதாகிருஷ்ணன், H ராஜா ஆகியோரும், வானதி ஸ்ரீனிவாசன் மதுரையை சேர்ந்த பேராசிரியர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் தலைவர் பதவிக்கு முயற்சித்து வருகின்றனர்.

இதில் பொன்ராதாகிருஷ்ணன் மற்றும் சி பி ஆர் ஆகியோர் இதற்கு முன் தமிழக பாஜக தலைவராக பதவி வகித்திருக்கிறார்கள் அத்துடன் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்திருக்கும் காரணத்தால் இவர்கள் இருவருக்கும் வாய்ப்புகள் குறைவு என்று தெரியவந்துள்ளது.

அதே நேரம் பாஜக தேசிய செயலாளர் H ராஜா, வானதி ஸ்ரீனிவாசன், மற்றும் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் பதவிக்கு முயற்சித்து வருகிறார்கள், இதில் ஒருவரை தான் தமிழக பாஜக தலைவராக பாஜக தலைவர் அமிட்ஷா தேர்ந்தெடுத்து வைத்துள்ளதாகவும் மூவரில் யாரை தேர்ந்தெடுப்பது என்ற ஆலோசனை நாளை நடைபெறும் என்றும் இதன் மூலம் புதிய பாஜக தமிழக தலைவர் நாளை உறுதி செய்யப்படும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

READ  தமிழக பாஜக தலைவராக யார் வர வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்ன சொல்கிறது டெல்லி தலைமை?

இதுகுறித்த முறையான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.

©TNNEWS24

இது போன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here