BCCI அறிவிப்பு ஹோலியின் கருத்தை ஏற்கமுடியாது. இவர்களில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார் தெரியுமா?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளராக இவர்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உண்டு கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நடந்த முடிந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதியில் வெளியேறியது. இதனால் பல்வேறு சர்ச்சைக்கு ஆளாகியுள்ள இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. தற்போது உள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், பவுலிங் பயிற்சியாளர் ஆகியோரை இந்திய கிரிக்கெட் வாரியம் மாற்ற திட்டமிட்டுள்ளது. மேலும் இம்முறை பயிற்சியாளர் தேர்வில் அணியின் கேப்டன் கருத்து ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

1.டாம் மூடி
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான டாம் மூடி, ஐ.பி.எல் தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கோச்சாக சிறப்பாக பணி செய்துள்ளார். அவரின் பெயர் தற்போது பரிசீலனையில் உள்ளது.

READ  அரசு பள்ளியில் படிக்கிறீர்களா உங்களுக்கு ஒரு நல்ல செய்தி செங்கோட்டையன் தகவல்

2.சேவாக்
இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக்கின் பெயர் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னும் சேவாக் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

3.டெர்வர் பெலிஸ்
இவரது கோச்சில் தான் தற்போது இங்கிலாந்து அணி உலகக்கோப்பை வென்றுள்ளது. முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான இவர், இலங்கை அணியையும் வெற்றிகரமாக கோச் செய்துள்ளார். இவரது பயிற்சியின் தலைமையில் தான் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இலங்கை அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

4.மஹிலா ஜெயவர்த்தனே
முன்னாள் இலங்கை அணியின் கேப்டான மஹிலா ஜெயவர்த்தனேவின் பெயர் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கோச்சாக சிறப்பாக செயல்பட்டு இரு முறை கோப்பை வென்றுள்ளார்.

READ  இந்தியா சொன்ன புதிய விதிமுறையை ஏற்றுக்கொண்ட ஐசிசி இனி பேட்ஸ்மேன்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு இருக்கு?

5.ஸ்டீபன் பிளெமிங்
முன்னாள் நியூசிலாந்து அணியின் கேப்டான ஸ்டீபன் பிளெமிங்கின் பெயர் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோச்சாக சிறப்பாக செயல்பட்டு இரு முறை கோப்பை வென்றுள்ளார்.

6.மிக்கி ஆர்தர்
மிக்கி ஆர்தர், இந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு கோச்சாக செயல்பட்டார். தென் ஆப்ரிக்காவின் நீண்ட நாள் கோச்சாக செயல்பட்ட அவர், இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார்.

இவர்களிளில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக், மும்பை இந்தியன் அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே (இலங்கை ) சென்னை அணியின் பயிற்சியாளர் பிளெமிங் (நியூஸிலாந்து ) ஆகியோர்களில் ஒருவர்தான் BCCI பட்டியலில் இடம் பெற்றிருப்பதாகவும் அதில் சேவாக் இடம்பெற வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. யார் இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் என்பதனை அடுத்த மாதம் அறிவிக்கிறது BCCI.

READ  பிள்ளையார் கொழுக்கட்டை சாப்பிட்ட மகனை அடித்து வெளுத்த தந்தை ! தமிழகத்தில்தான் இந்த கூத்து !

கோலி சென்றமுறை ரவிசாஸ்திரி இடம்பெற வேண்டும் என்று கருத்து தெரிவித்ததால் அவர் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார் இந்நிலையில் தற்போது கோலியின் கருத்தை கேட்க போவதில்லை என்று கூறியுள்ளது BCCI.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் உடனடியாக பெற ACT SPORT என்று உங்களது வாட்ஸாப் எண்ணில் இருந்து 9962862140 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here