இனி தனிக்கொடி ரத்து உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரில் நடக்கப்போகும் 6 முக்கிய மாற்றங்கள் இதுதான் ! கொண்டாட்டத்தில் இறங்கிய இந்தியர்கள் !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தில் ஆட்சி புரிந்து வந்த மகாராஜா ஹரிசிங் இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீரை இணைக்க 1949 ஆம் ஆண்டு ஒப்புக்கொண்டார்.

இதன் பின்னர் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் கைப்பற்றியதால் அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என அழைக்கப்பட்டு வருகிறது.
1954-ம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவரால் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வகையில் சட்டப்பிரிவு 370 இயற்றப்பட்டது.

இதன் மூலம் வெளியுறவுத்துறை, ராணுவம், தகவல் தொடர்பு தவிர, மற்ற நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் எந்த சட்டமானாலும் காஷ்மீர் சட்டப்பேரவை ஒப்புதல் பெற்றாலே மாநிலத்தில் அமல்படுத்த முடியும்.

Loading...
READ  இலங்கையில் இஸ்லாமியர்களின் பதவிகள் பறிப்பு , தேர்தலில் போட்டியிட தடை ?

தனி கொடி, இறையாண்மை, தன்னாட்சி கொண்ட மாநிலமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் சட்டப்பிரிவு 370ன் கீழ் 35ஏ என்ற பிரிவும் சேர்க்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவைச் சேர்ந்த பிற மாநிலத்தவர்கள் காஷ்மீரில் அசையா சொத்துக்களை வாங்க முடியாது என வழிவகை செய்யப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவை ரத்து செய்யப்பட்டதாக மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்தது.

இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட அறிவிப்பு இன்று முதலே அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால், சட்டப்பிரிவு நீக்கப்பட்டதின் மூலம் காஷ்மீரும் இந்தியாவின் பிற மாநிலங்களை போன்று செயல்படும். மற்ற மாநிலத்தவர்கள் காஷ்மீரில் அசையா சொத்துகளை வாங்க முடியும்.

READ  இன்னும் இரண்டு நாட்களில் விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் முடிவடைகிறது

ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து லடாக் பகுதியை சட்டப்பேரவையில்லா யூனியன் பிரதேசமாகவும் (அந்தமான், லட்சத்தீவுகள் போன்று), ஜம்மு காஷ்மீரை சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் (டெல்லி, புதுச்சேரி) மாற்றப்பட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் மற்றும் சட்டதிருத்தங்கள் அனைத்தும் ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்தும்.
1954ம் ஆண்டு ஒப்பந்தப்படி ஜம்மு காஷ்மீரின் சட்டப்பேரவை பதவிக்காலம் 6 ஆண்டாக இருந்து வந்தது. தற்போது அந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் மற்ற மாநில சட்டப்பேரவையின் காலம் போன்று ஜம்மு காஷ்மீருக்கும் 5 ஆண்டுகள் பதவிக்காலமாக நிர்ணயிக்கப்படும்.

இனி ஜம்மு காஷ்மீர் குறித்த கவலையை இந்திய மக்கள் 6 மாதத்தில் மறந்துவிடலாம்.

நிரந்தர தீர்விற்கு வழி செய்துவிட்டது மத்திய அரசு.

©TNNEWS24

இது போன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

READ  லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here