தவறு செய்வது முதலமைச்சராக இருந்தாலும், தண்டிக்கப்படுவார்…மத்திய அரசு எச்சரிக்கை

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள போக்குவரத்து விதிகளை மீறினால், அது முதலமைச்சராக இருந்தாலும் அபராதம் வசூலிக்கப்படும் என்று மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போக்குவரத்து துறையில் கொண்டுவரப்பட்ட சட்டங்களை மதிக்காமல் நடக்கும் அதிகாரிகளையும் கண்காணிக்கும் அதிநவீன தொழில்நுட்பங்கள், நாடு முழுவதும் எல்லா இடங்களிலும் பொறுத்தப்படவுள்ளது. அதனால் இனிவரும் காலங்களில் வாகன ஓட்டுனர்கள், போக்குவரத்து காவலர்களின் ஏ.டி.எம். இயந்திரமாக இருக்க மாட்டார்கள் என்று நிதின் கட்கரி கூறினார்.

ஊபர், ஓலா போன்ற கால் டாக்சி நிறுவனங்களுக்கு, வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து புதிய சட்டம் நடைமுறைக்கு வருகிறது. இந்த மோட்டார் வாகன சட்ட திருத்தத்தில் பல்வேரு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டதாக அவர் கூறினார். இன்றைய சூழ்நிலையில், இதுபோன்ற கால் டாக்சி ஓட்டுநர்களால்தான் அதிகமாக விபத்துகள் நடக்கிறது. அதை குறைக்கத்தான் கால் டாக்சி நிறுவனங்களுக்கு கடுமையான சட்டங்களை போட்டுள்ளோம் என்று அவர் கூறினார். இந்த சட்ட திருத்தத்தினால் இனி வரும் காலங்களில் போக்குவரத்து விபத்துகள் குறைய ஆரம்பிக்கும் என்று அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

READ  சிவகங்கை மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிறதா? குஷியில் வாக்காளர்கள்

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here