தமிழகத்தில் முதல் முறை இந்து கடவுளை கேலி செய்த பத்திரிகையாளரை வீட்டிற்கு அனுப்பியது நிர்வாகம் ! இதற்கு யார் காரணம் தெரியுமா?

0
இது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

சென்னை.,

தமிழகத்தில் நாளுக்கு நாள் இந்து கடவுள்கள் மற்றும் இந்துகள் நம்பிக்கைகளை கிண்டல் செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது, குறிப்பாக பெரியாரிஸ்ட்கள், கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் இந்து கடவுள்களை தொடர்ந்து கிண்டல் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது தமிழகத்தில் மக்களிடம் உண்மையை எடுத்து செல்லும் பணியில் பணிபுரியும் பத்திரிகையாளர்களும் இந்து கடவுள்கள் மற்றும் அவர்களது நம்பிக்கையை கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர். NEWS7tamil தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் மாற்று மதத்தை சேர்ந்த செய்தியாளர் சமீபத்தில் அத்திவரதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கிண்டல் செய்து அதனை தனது சமூகவலைத்தளத்திலும் பதிவிட்டிருந்தார்.

READ  #BREAKING காஷ்மீரில் 250 தீவிரவாதிகளை போட்டுத்தள்ளுகிறது மத்திய அரசு வரலாற்றில் முதல்முறை !

அதற்கு பலரும் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர் மேலும் பொதுவான செய்தியை எடுத்து சொல்லும் ஊடகத்தில் பணிபுரியும் ஒரு நபர் இந்து மதத்தின் நம்பிக்கையை விமர்ச்சிப்பது எந்தவகையில் நியாயம் என்றும் இவர் எப்படி நடுநிலையாக இருப்பார், உடனடியாக இவரை வேலையில் இருந்து நிறுத்தவேண்டும் என்று பலரும் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்தனர்.

மேலும் சிலர் இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஊடகத்தினை புறக்கணிப்போம் என்று நேரடியாக தெரிவித்தனர், தற்போது தனியார் தொலைக்காட்சி நிறுவனம் அத்திவரதர் குறித்து தவறாக விமர்சனம் செய்த பத்திரிகையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதுடன் வேலையில் இருந்து இடை நீக்கம் செய்துள்ளது.

முதல் முறையாக தமிழகத்தில் இந்துக்களின் குரல்கள் இப்போது ஊடக துறையிலும் எதிரொலிப்பதாகவும், அதற்கு அனைத்து இந்துக்களின் ஒருங்கிணைந்த ஒற்றுமையே காரணம் என்று சமூகவலைத்தளங்களில் இந்து அமைப்புகள் நன்றி தெரிவித்துள்ளனர்

READ  பாரத் மாதகே ஜெய்யில் இணைந்தார் நடிகர் மோகன்லால் மலையாள திரை உலகில் அதிர்ச்சி
மனோஜ்குமார் இடைநீக்கம் செய்யப்பட்ட நெறியாளர்

மேலும் இந்துக்கடவுள்களை விமர்சனம் செய்பவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி ஊடகங்கள் சிறப்பித்த காலம் போய் தற்போது இந்து கடவுள்களை விமர்சனம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வைத்திருப்பது தமிழகத்தில் இதுவே முதல் முறை !

இதற்கு சமூக வலைத்தளங்களில் நேரடியாக குரல் கொடுத்த ஒவ்வொரு தனிமனிதரும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உங்களது whatsapp எண்ணில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here