ஒரு உயிரை கொடுத்து பல உயிரை காப்பற்றி இருக்கிறார் ராமலிங்கம் ! NIA சோதனையில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

ஒரு உயிரை கொடுத்து பல உயிரை காப்பற்றி இருக்கிறார் ராமலிங்கம் ! NIA சோதனையில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்.

தென்காசி.,

கடந்த பிப்ரவரி மாதம் 5 ம் தேதி திருப்புவனம் பகுதியை சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் மதம் மாற்றம் செய்ய முயற்சித்தவர்களை தட்டி கேட்டதால் அன்று இரவே கொடூரமான முறையில் தனது மகன் கண்ணெதிரே வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இது குறித்த வீடியோக்கள் இணையத்தில் பரவியதை தொடர்ந்து நாடு முழுவதும் இந்து அமைப்புகள் மிக பெரிய எதிர்ப்பினை பதிவு செய்தனர், தமிழகத்தை கடந்து வடமாநிலங்களிலும் இந்த துயர சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Loading...
READ  BREAKING சன் டிவி க்கு தடையா? சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல் ! இதற்கும் மோடிதான் காரணமா?

இதுகுறித்த வழக்கினை கடந்த ஏப்ரல் 29 தேதி முதல் தேசிய புலனாய்வு அமைப்பான NIA விசாரித்து வருகிறது, இதில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன, நேற்று தென்காசி சென்றிருந்த தேசிய புலனாய்வு அமைப்பு அமைப்பினர் ராமலிங்கம் படுகொலையில் தொடர்புடைய மைதீன் அஹமது என்பவன் வீட்டில் சோதனை நடத்தியது.

சோதனையின் முடிவில் பாகிஸ்தான் நாட்டு பணங்கள் கிடைத்துள்ளன அதனை தாண்டி தமிழகம் முழுவதும் இலங்கையில் நடை பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளை போன்று நடத்த ராமலிங்கம் படுகொலையில் தொடர்புடைய கும்பல் திட்டம் தீட்டி இருந்ததாகவும் விசாரணையில் தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.

இதன்மூலம் ராமலிங்கம் கொலையில் ஈடு பட்டதால் அதில் முக்கியமான ஸ்லீப்பர் செல்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதால் தமிழகத்தில் பெரும் அழிவு தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் NIA தமிழகம் முழுவதும் மிக பெரிய அளவில் தீவிரவாதிகளை கண்டறியும் நோக்கில் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

READ  திருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட்டு அப்துல்கலாம் சொல்லிய வார்த்தைகள். மத நல்லிணக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள் பெரியாரிஸ்ட்களே !

தனது உயிரை கொடுத்து அதன் மூலம் தமிழகத்தில் பல உயிர்களை காப்பற்றி இருக்கிறார் ராமலிங்கம் என்று அதிகாரிகளே கூறிவருகிறார்கள். இனியாவது தமிழக மக்கள் பிரிவினைவாதிகளை அடையாளம் காணவில்லை என்றால் நாளை தமிழகத்திற்கும் இலங்கை நிலைமை உருவாகலாம் என்றும் எச்சரிக்கின்றனர்.

©TNNEWS24


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here