கோரிக்கை வைத்த 48 மணி நேரத்தில் தமிழகத்திற்கு உதவிய நிர்மலா சீதாராமன் K.T ராகவன் பெருமிதம் !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

கோரிக்கை வைத்த 48 மணி நேரத்தில் தமிழகத்திற்கு உதவிய நிர்மலா சீதாராமன் K.T ராகவன் பெருமிதம் !

பாஜகவை சேர்ந்த K.T ராகவன் அறிக்கை ஒன்றிணை வெளியிட்டுள்ளார், அதில் கோரிக்கை வைத்த 48 மணி நேரத்திற்குள் நிறைவேற்றிய மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பியூஸ் கோயல் ஆகியோருக்கு தனது நன்றியினையும் பதிவு செய்துள்ளார்.

48 மணி நேரத்தில் சிறப்பு ரெயில்கள்…..

நேற்றைய முன் தினம் செவ்வாய்கிழமை மாலை 4 மணிக்கு மாநில தலைமை அறிவுருத்தலின் படி டெல்லியில் பாராளுமன்ற வளாகத்திலுள்ள நிதியமைச்சர் அலுவலகத்தில் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்தேன்…உடன் காஞ்சி கோட்ட பாஜக பொறுப்பாளர் திரு.பாஸ்கர் வந்திருந்தார்…

Loading...
READ  மோடியின் கைகால்களை வெட்டுவேன் என்று சொல்லிய நாம் தமிழர் தொண்டருக்கு நேர்ந்த சோகம் !

காஞ்சி நகரில் அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு 48 நாட்கள் காஞ்சிபுரத்திற்க்கு சிறப்பு ரயில்கள் விட உதவ வேண்டுமென கேட்டுக் கொண்டோம்…அமைச்சர் அவர்களும் தரிசனம் செய்ய வர வேண்டுமென கேட்டுக்கொண்டேன்…

தான் தரிசனம் செய்ய காஞ்சிபுரம் வருவுள்ளேன் என்று சொன்ன நிதியமைச்சர் தன்னுடைய செயலாளரை அழைத்து பாராளுமன்ற வளாகத்தில் ரெயில்வே அமைச்சர் எங்கு இருக்கின்றார் என கண்டறிய உத்தரவிட்டார்…பாராளுமன்ற வளாகத்தில் அமைச்சர் சதானந்த கௌடா அவர்கள் அலுவலகத்தில் திரு .பியூஷ் கோயல் உள்ளதாக தன்னுடைய செயலாளர் சொன்னதையடுத்து வாங்க ராகவன் நேரே அவரை பார்ப்போம் என அவரை பார்க்க அழைத்து சென்றார்….

அத்திவரதர் வைபவத்தை மிகச்சிறப்பாக அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் சதானந்த கௌடா விடமும் எடுத்துரைத்து எங்களுடைய கோரிக்கையான சிறப்பு ரயில்களை காஞ்சிபுரத்திற்கு இயக்க ரெயில்வே நிர்வாகத்திற்க்கு உத்தரவிட கோரினார்…..மாண்புமிகு. பியூஷ் கோயல் அவர்கள் உடனடியாக அதை ஏற்றுக்கொண்டு தன்னுடைய ரெயில்வே துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்..

READ  மோடி தான் கெத்து மாணவர்கள் முன்னிலையில் வெளுத்துக்கட்டிய பாண்டே ! கடும் கோபத்தில் அந்த கட்சி?

நாங்கள் நேற்று டெல்லியிலிருந்து சென்னை வருவதற்க்குள் ரெயில்வே அதிகாரிகள் காஞ்சிபுரத்திற்க்கு வந்து பார்வையிட்டு சென்று தகவல்களை சொன்னார்கள்….

இன்று தற்போது சிறப்பு ரெயில்கள் விடப்பட்டுள்ள அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது….

நாளை பட்ஜெட் தாக்கல் செயய வேண்டிய பணிகள் அதிகம் இருப்பினும் தமிழகத்தில் நடைபெறம் முக்கியமான ஆன்மீக நிகழ்விற்க்கு உடனடியாக உதவிய மாண்புமிகு மத்திய ரெயில்வே அமைச்சர் திரு.பியூஷ் கோயல் அவர்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறேன்….

எல்லாவற்றையும் விட அவரிடம் பேசிய போது உடனுக்குடன் துறை அமைசர்களிடம் பேசியும் நேரிலும் அழைத்து சென்று கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்த மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை….

அத்திவரதர் இவர்களுக்கு தேசப்பணியில் பேரருளை வழங்கட்டும்..

இவ்வாறு தனது நன்றியை KT ராகவன் தெரிவித்துள்ளார். மேலும் சிறப்பு ரெயில்களின் பட்டியலையும் அவர் அத்துடன் இணைத்துள்ளார்.

READ  உலகின் வலிமையான தலைவர் மோடி தான் ! இங்கிலாந்தின் ஹெரால்ட் நடத்திய ஆய்வின் முடிவுகள் ! உலக தலைவர்களை பின்னுக்கு தள்ளினார்.

©TNNEWS24


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here