மன்னிப்பு கேட்டனர் எதனால் கேட்டனர் தெரியுமா? இனி இதே வழியில் தெறிக்கவிடப்போவதாக காவிகள் எச்சரிக்கை?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

மன்னிப்பு கேட்டனர் எதனால் கேட்டனர் தெரியுமா? இனி இதே வழியில் தெறிக்கவிடப்போவதாக காவிகள் எச்சரிக்கை?

சென்னை.,

சின்னத்திரை காமெடி நடிகர்களான நிஷாவும், பழனியும் பகிரங்கமாக வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டனர். இதற்கு காரணமாக அமைந்தது திமுக அமைத்து கொடுத்த மேடையில் நிஷாவும், பழனியும் பாஜக குறித்து விமர்சனம் செய்ததுடன், பிரதமர் மோடி மற்றும் தமிழிசை குறித்து தரமற்ற வகையில் விமர்சனம் செய்ததுதான்.

அதனை தொடர்ந்து பாஜகவை சேர்ந்த இளைஞர்கள் சமூகவலைத்தளங்களில் நிஷாவினை கண்டித்து பல்வேறு விமர்சனங்களை வீடியோ மற்றும் மீம்ஸ் மூலம் வெளிப்படுத்தி வந்தனர். ஆனால் இவை நிஷா மற்றும் அவரது குழுவினரை அச்சமூட்டியதே தவிர பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் அளவிற்கு கொண்டு செல்லவில்லை. #24

Loading...
READ  இப்போ என்ன நீங்க செத்துடீங்களா பா ரஞ்சித்தை கிழித்தெடுத்த காயத்ரி ரகுராம் பதுங்கிய ரஞ்சித் !

அதனை தொடர்ந்து தேவகோட்டை மற்றும் பல பகுதிகளில் திருவிழா நிகழ்ச்சிகளில் முன்கூட்டியே அட்வான்ஸ் கொடுத்து புக் செய்திருந்த நிஷாவின் காமெடி நிகழ்ச்சிகளை ரத்து செய்தனர். இதனை இவர்கள் சற்றும் எதிர்பார்க்க வில்லை வியாபாரத்திலேயே இந்துக்கள் கை வைத்தனர்.

நிகழ்ச்சியை ரத்து செய்த செய்தியை படிக்க

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருவரும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டனர். இருவரும் மன்னிப்பு கேட்டு வெளியிட்ட வீடியோ இணையத்தில் தற்போது உலாவருகிறது. அதில் இருவரும் வாழ்நாளில் இதுபோன்ற தவறினை செய்யமாட்டோம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் பாஜகவினர் இனி யாராவது தேவையின்றி இந்துமதம், மற்றும் தலைவர்கள் மீது விமர்சனம் செய்தால் அவர்களின் வியாபாரத்தினை துண்டிக்க போவதாக எச்சரித்துள்ளனர். குறிப்பாக ராஜராஜன் குறித்து பேசிய பா ரஞ்சித் இயக்கும் திரைப்படங்களையும் இதே போல் புறக்கணிக்க போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

READ  பண மோசடிகளின் நினைவு சின்னம் பா.சிதம்பரம்...அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷர் மேத்தா பரபரப்பு பேச்சு.

விநாயகர் ஊர்வலம் நடத்த அனுமதிக்காத செங்கோட்டை இஸ்லாமியர்கள் கடைகளில் வியாபாரம் செய்வதை இந்துக்கள் புறக்கணித்தனர் அதனை தொடர்ந்து இஸ்லாமியர்கள் நாங்கள் இந்து மதத்தை எதிர்க்கவில்லை எங்களிடம் வியாபாரம் செய்யுங்கள் என்று கேட்கும் நிலைக்கு சென்றது தற்போது மீண்டும் நிஷா, ரஞ்சித் போன்றோர் அதே வழியில் தங்கள் வியாபாரங்களை இழப்பார்களா என்பது இனி வரும் காலங்களில்தான் தெரியவரும்.

ஒன்று மட்டும் உறுதி தமிழகத்தில் முன்புபோல் இந்துக்கள் கலாச்சாரம் குறித்து பேசினால் உடனுக்குடன் பதிலடி கிடைக்கிறது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here