பெட்ரோல் டீசல் வாங்க இனி பெட்ரோல் பங்கிற்கு போக தேவையில்லை மத்தியஅரசு அதிரடி திட்டம்.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

டெல்லி.

தற்போது வரை பெட்ரோல், டீசல் வாங்க வேண்டும் என்றால் இந்தியாவில் பெட்ரோல் பங்க் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதுவும் வாகனத்துடன் போனால்தான் பெட்ரோல், டீசல் கிடைக்கும்.

ஆனால் விரைவில் பெட்ரோல், மற்றும் டீசல் சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை செய்ய மத்திய அரசு அதிரடி திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிபொருள் துறை அமைச்சகம் புதிய திட்டம் ஒன்றை வகுத்து அந்த திட்டத்தை அமைச்சரவை ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைத்துவிட்டால் இனிமேல் பொதுமக்கள் சூப்பர் மார்க்கெட்டுகளில் பெட்ரோலை வாங்கி கொள்ளலாம். இதற்காகவே பெட்ரோல் விற்பனைக்கான கட்டுபாடுகளை தளர்த்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சூப்பர் மார்க்கெட்டில் பெட்ரோல் விற்பனை செய்யும் அனுமதியை பெற பியூச்சர் குரூப், ரிலையன்ஸ், சவுதி அராம்கோ ஆகிய நிறுவனங்கள் முயற்சி வருவதாக கூறப்படுகிறது. சூப்பர் மார்க்கெட்டில் பெட்ரோல் விற்பனை தொடங்கிவிட்டால் வாகனம் வைத்திருப்பவரகளுக்கு வசதியாக இருக்கும் என கருதப்படுகிறது.

READ  சாதிக்பாட்ஸா கொலை குறித்து மாரிதாஸ் தகவல் திமுகவின் அடுத்த விக்கெட் அவுட் !

மேலும் பெட்ரோல் பங்க் அருகில் இல்லாத கிராமங்கள் மற்றும் ஊர்களுக்கு இதன் மூலம் விநியோகம் செய்யலாம் என்றும், டீலர்களுக்கு ஆகும் கமிஷன் செலவினை குறைத்து அதன் பயனை மக்களுக்கு வழங்கலாம் என்றும் இதன் மூலம் மத்தியஅரசு திட்டமிட்டுருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் தமிழகத்தில் இதற்கும் ஏதேனும் போராட்டம் கிளம்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here